FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!

சென்செக்ஸ் 1,109.10 புள்ளிகள் உயர்ந்து 73,033.78 புள்ளிகளாகவும், நிஃப்டி 358.60 புள்ளிகள் உயர்ந்து 22,721.95 புள்ளிகளாக நிறைவடைந்தது.

38 வினாடிகள் முன்பு
மும்பை பங்குச் சந்தை - (சித்திரிப்பு)
பகிர்:

மும்பை: இன்றைய பங்குச் சந்தை வலுவான மீட்சியுடன் நிறைவடைந்தன. ஐடி, நிதி மற்றும் எஃப்எம்சிஜி துறைப் பங்குகள் ஏற்றம் கண்டன. ரூபாயின் மதிப்பு மீட்சி மற்றும் நீண்ட கால ஆதாய வரி குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து உள்ளிட்டவை இதற்கு உந்துதலாக அமைந்தன. இதன் விளைவாக, முக்கிய குறியீடான சென்செக்ஸ் 1,109 புள்ளிகள் உயர்ந்ததுடன், நிஃப்டி 22,720 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

இன்றைய காலை வர்த்தகத்தில், சென்செக்ஸ் 1,120.99 புள்ளிகள் உயர்ந்து 73,045.67 என்ற உச்சத்தை எட்டியது. தொடர்ந்து நடைபெற்ற வர்த்தகத்தில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 1,109.10 புள்ளிகள் உயர்ந்து 73,033.78 புள்ளிகளாக நிறைவடைந்த நிலையில், இது கடந்த நான்கு மாதங்களில் பங்குச் சந்தையில் பதிவான மிகப்பெரிய ஒற்றை நாள் ஏற்றமாக அமைந்தது.

50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 358.60 புள்ளிகள் உயர்ந்து 22,721.95 புள்ளிகளாக நிறைவடைந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலான காலத்தில் சந்தை கண்ட மிகச்சிறந்த ஒற்றை நாள் மீட்சி இதுவேயாகும்.

Advertisement

Advertisement

30 நிறுவனங்கள் கொண்ட சென்செக்ஸ் பட்டியலில், எச்.சி.எல் டெக் நிறுவனம் 8.28 சதவீதம் உயர்ந்தது. இந்நிறுவனம் அதன் 2வது காலாண்டு ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 21.18 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து, ரூ. 5,132 கோடி லாபம் ஈட்டியதாக அறிவித்ததே இந்த ஏற்றத்திற்குக் காரணமாகும். வேகமாக வளர்ந்து வரும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகள் மூலம் கிடைத்த வரவு மற்றும் குறைவான வரிச் செலவு ஆகியவை இதற்கு உதவியது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 6.59 சதவீதமும், டெக் மஹிந்திரா 4.90 சதவீதமும், இன்ஃபோசிஸ் 4.44 சதவீதமும், எச்யுஎல், டைட்டன், பஜாஜ் ஃபின்சர்வ், எஸ்பிஐ, எச்.டி.எஃப்.சி. வங்கி, எம்&எம் மற்றும் ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்நதன மறுபுறம் கோடக் மஹிந்திரா வங்கி, எடர்னல் மற்றும் மாருதி ஆகிய பங்குகள் சரிந்தன.

தொழில்நுட்ப நிறுவனங்களின் வருவாய் எதிர்பார்ப்பை விட சிறப்பாக இருந்ததால், பெருநிறுவனங்களின் லாப வளர்ச்சி குறித்த நம்பிக்கை முதலீட்டாளர்களிடம் அதிகரித்தது. இது குறிப்பாக பெரிய நிறுவனப் பங்குகளின் விலையை உயர்த்தியதுடன், இந்திய ரூபாயின் மதிப்புக்கு ஆதராவக அமைந்தது. இதற்கிடையில், பத்திரங்களின் வருவாய் சரிந்ததால், சந்தையின் போக்கு இன்றைய உச்ச நிலைக்கு அருகில் சென்று நிறைவடைந்தன.

அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு சுமார் 41 காசுகள் உயர்ந்து ரூ. 95.37 ஐ எட்டியது. டெரிவேடிவ்ஸ் சந்தையில் ஊக வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளை அறிவித்ததைத் தொடர்ந்து, ரூபாய் மதிப்பு தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்தது. கடந்த மூன்று நாட்களில் ரூபாய் மதிப்பு 1.5 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை, தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 5.46 சதவீதமும், ஜப்பானின் 225 குறியீடும் சரிவுடன் நிறைவடைந்தது. அதே வேளையில், ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

ஐரோப்பிய பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமானது. அமெரிக்க பங்குச் சந்தை நேற்று (திங்கள்கிழமை) பெரும்பாலும் சரிவுடன் நிறைவடைந்தன.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 1,708.48 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.66 சதவீதம் சரிந்து, பீப்பாய் ஒன்றுக்கு 104.6 அமெரிக்க டாலராக உள்ளது.

summary

Stock markets rebounded sharply on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments