இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!
சென்செக்ஸ் 1,483.72 புள்ளிகள் சரிந்து 82,435.99 புள்ளிகளாகவும், நிஃப்டி 450.95 புள்ளிகள் சரிந்து 25,349.65 புள்ளிகளாக நிலைபெற்றது.

மும்பை: இரண்டு நாள் ஏற்றத்திற்குப் பிறகு, வங்கிப் பங்குகளின் முதலீட்டாளர்கள் லாபத்தை ஈட்டுவதற்காக பங்குகளை விற்பனை செய்ததால், இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிந்தும், நிஃப்டி 25,350 க்கு கீழ் நிறைவடைந்தது.
முதலில் உயர்ந்து வர்த்தகமான பங்குச் சந்தை, பிறகான வர்த்தகத்தில் 1,523.83 புள்ளிகள் சரிந்து 82,395.88 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 1,483.72 புள்ளிகள் சரிந்து 82,435.99 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 450.95 புள்ளிகள் சரிந்து 25,349.65 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் ஆக்சிஸ் வங்கி 3.95 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 3.39 சதவீதமும், எச்டிஎஃப்சி வங்கி 3.22 சதவீதமும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 2.91 சதவீதமும், கோடக் மஹிந்திரா வங்கி 2.52 சதவீதமும் சரிந்தன. இதற்கு மாறாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டெக் மஹிந்திரா, எச்.சி.எல் டெக், டைட்டன், ஐடிசி மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.
Advertisement
Advertisement
தொடர்ந்து நான்கு வாரங்களாக ஏற்றம் கண்ட இந்தியப் பங்குச் சந்தை, இன்றைய வர்த்தகத்தில் சரிவுடன் முடிவடைந்தன. ஆரம்பத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை, முதலீட்டாளர்கள் லாபத்தைப் பதிவு செய்ததால் தொடர்ந்து சரிந்தது. பேங்க் நிஃப்டி மற்றும் நிஃப்டி 26,000 புள்ளிகளை நெருங்கிய நிலையில், வங்கி, நிதி மற்றும் உலோகத் துறை பங்குகளில் அதிக விற்பனை ஏற்பட்டது.
டாடா ஸ்டீல், ஏபிஎல் அப்பல்லோ டியூப்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 26.6% பங்குகளை ரூ.15,510 கோடிக்கும், மேலும் 26% பங்குகளை ரூ.16,756 கோடிக்கும் வாங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்தித் திறன் மூன்று மடங்காக அதிகரிக்கும். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து டாடா ஸ்டீல் பங்கு 8.16% சரிந்தது.
ஐரோப்பிய சந்தை உயர்ந்து வர்த்தகமானது. ஆசிய சந்தையில், தென் கொரியாவின் கோஸ்பி 3.31 சதவீதம் சரிந்தது. ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மாற்றமின்றி முடிவடைந்தது. அதே நேரத்தில் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு சரிவுடன் முடிவடைந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கப் பங்குச் சந்தை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. நாஸ்டாக் காம்போசிட் குறியீடு 5.28 சதவீதம் சரிந்த நிலையில் எஸ் அண்ட் பி 500 குறியீடு 3.70 சதவீதமும், டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி குறியீடு 1.93 சதவீதமும் வீழ்ச்சியடைந்தன.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.10,308.42 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.68 சதவீதம் குறைந்து பேரல் ஒன்றுக்கு 91.94 டாலராக உள்ளது.