FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

சென்செக்ஸ், 352.64 புள்ளிகள் சரிந்து 73,246.03 புள்ளிகளாகவும், நிஃப்டி 50.90 புள்ளிகள் சரிந்து 22,698.85 புள்ளிகளில் நிறைவடைந்தது.

28 அக்டோபர் 2026, 5:21 pm
கோப்புப் படம் | மும்பை பங்குச் சந்தை
பகிர்:

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடி நிறுவன பங்குகள், உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் கொள்கை முடிவுக்கு முன்னதாக நிலவிய அச்சத்தால், பங்குச் சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் முடிவடைந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செகஸ் 995.1 புள்ளிகள் சரிந்து 72,603.57 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், பெரும் இழப்புகளை மீட்டெடுத்தது, 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ், 352.64 புள்ளிகள் சரிந்து 73,246.03 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 50.90 புள்ளிகள் சரிந்து 22,698.85 புள்ளிகளில் நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலே பிரம்மாண்டமான அறிமுகத்தைப் பெற்ற ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், பங்கின் வெளியீட்டு விலையான ரூ.1,119 ஐ விட சுமார் 27 சதவீதம் உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்ததால், பங்குச் சந்தை மூலதன மதிப்பின் அடிப்படையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக, இந்தியாவின் இரண்டாவது மிக மதிப்புமிக்க உள்நாட்டு நிறுவனமாக ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் உருவெடுத்தது. இதனையடுத்து, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் சந்தை மூலதனம் ரூ.13 லட்சம் கோடியாக உயர்ந்தது.

Advertisement

Advertisement

சென்செக்ஸில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 3.46 சதவீதமும், இன்ஃபோசிஸ் 3.34 சதவீதமும், டெக் மஹிந்திரா 1.83 சதவீதமும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 1.68 சதவீதமும், பார்தி ஏர்டெல் 1.42 சதவீதமும் மற்றும் டாடா ஸ்டீல் 1.37 சதவீதமும் சரிந்தன.

அதிகரித்த வருவாயின் காரணமாக, லார்சன் & டூப்ரோவின் 2வது காலாண்டு முடிவில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 32.5 சதவீதம் அதிகரித்து ரூ. 5,202.10 கோடியாக உயர்ந்ததாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் பங்குகள் 4% உயர்ந்தன.

ட்ரென்ட், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி மற்றும் இன்டர்குளோப் ஏவியேஷன் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.

கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் ஐடி பங்குகளில் ஏற்பட்ட கடுமையான விற்பனையை தொடர்ந்து முதலீட்டாளர்கள் அச்சத்தில் இருந்ததால், உள்ளூர் பங்குச் சந்தை நிலையற்ற தன்மையுடன் வர்த்தகமாகி சரிந்தன. சௌதி அரேபியா மீதான ஹூதி தாக்குதல்களைத் தொடர்ந்து எண்ணெய் விநியோகம் தடைகள் குறித்த அச்சம் எழுந்தது.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்றைய வர்த்தகத்தில் ரூ. 4,240.39 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கெய் 225, ஷாங்காயின் எஸ்எஸ்இ கூட்டு குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு ஆகியவை உயர்வுடன் முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தைகள் சரிவுடன் வர்த்தகமான நிலையில் அமெரிக்க பங்குச் சந்தை நேற்று (செவ்வாய்க்கிழமை) உயர்வுடன் முடிவடைந்தன.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 0.99 சதவீதம் உயர்ந்து 114.5 டாலராக உள்ளது.

summary

Market benchmark indices Sensex and Nifty ended lower on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments