FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 512 புள்ளிகளுடனும், 25,250 புள்ளிகளை கடந்த நிஃப்டி!!

சென்செக்ஸ் 512.34 புள்ளிகள் உயர்ந்து 82,104.79 புள்ளிகளாகவும், நிஃப்டி 146.80 புள்ளிகள் உயர்ந்து 25,291.10 புள்ளிகளாக நிறைவடைந்தது.

16 நவம்பர் 2026, 5:26 pm
பங்குச் சந்தை - கோப்புப் படம்
பகிர்:

மும்பை: தொடர்ச்சியாக வெளிநாட்டு நிதி வரத்தும், குறைந்து வரும் கச்சா எண்ணெய் விலையால் வங்கித் துறை, எஃப்.எம்.சி.ஜி. மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை பங்குகளின் ஏற்றம் காரணமாக பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று உயர்வுடன் முடிவடைந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 719.2 புள்ளிகள் உயர்ந்து 82,311.65 புள்ளிகளை எட்டியது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 512.34 புள்ளிகள் உயர்ந்து 82,104.79 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 146.80 புள்ளிகள் உயர்ந்து 25,291.10 புள்ளிகளாக நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

சென்செக்ஸில் ஐடிசி, பார்தி ஏர்டெல், எடர்னல், பவர் கிரிட், எச்டிஎஃப்சி வங்கி மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் உள்ளிட்ட பங்குள் உயர்ந்தும் மறுபுறம் டாடா ஸ்டீல், மாருதி, இன்டர்குளோப் ஏவியேஷன் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய பங்குகள் சரிந்தன.

பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று ரூ. 5,736.55 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். தொடர்ந்து இரண்டு மாதங்களாக முதலீட்டைத் திரும்பப் பெற்று வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தற்போது இந்தியப் பங்குகளில் ரூ.84,290 கோடியை முதலீடு செய்துள்ளனர்.

உலகளவில் செயற்கை நுண்ணறிவு துறை சார்ந்த பங்குகளில் ஏற்பட்ட விற்பனை அழுத்தம், கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் பெரிய நிறுவன பங்குகள் கவர்ச்சிகரமான விலையில் கிடைப்பதால், இந்தியச் பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்க முக்கியக் காரணங்களாக அமைந்தது.

ஆசிய சந்தையில், தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு ஆகியவை சரிவுடன் முடிவடைந்தன. ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு உயர்ந்து வர்த்தகமானது.

ஐரோப்பிய சந்தை கலவையான நிலையில் வர்த்தகமான நிலையில் அமெரிக்க பங்குச் சந்தை நேற்றைய முந்தினம் (வெள்ளிக்கிழமை) பெரும்பாலும் சரிவுடன் முடிவடைந்தன.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 0.34 சதவீதம் சரிந்து 95.51 அமெரிக்க டாலராக உள்ளது.

summary

Benchmark stock index Sensex climbed 512 points while Nifty settled near 25,300 on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.