ஏற்றம் கண்ட ஆட்டோ, எஃப்.எம்.சி.ஜி, நிதித்துறை பங்குகள்: சென்செக்ஸ் 772 புள்ளிகளுடனும், 25,250 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
சென்செக்ஸ் 772.75 புள்ளிகள் உயர்ந்து 81,879.40 புள்ளிகளாகவும், நிஃப்டி 210.40 புள்ளிகள் உயர்ந்து 25,255.05 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: தொடர்ந்து வரும் வெளிநாட்டு நிதி முதலீடு, எதிர்பார்த்ததை விட சிறந்த காலாண்டு முடிவுகள் மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவால் பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 2வது நாளாக உயர்வுடன் முடிவடைந்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 1.74 சதவீதம் உயர்ந்து 82,520.40 புள்ளிகளை எட்டியது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 772.75 புள்ளிகள் உயர்ந்து 81,879.40 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 210.40 புள்ளிகள் உயர்ந்து 25,255.05 புள்ளிகளாக நிலைபெற்றது.
Advertisement
Advertisement
சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா 5.25 சதவிகிதமும், இன்டர்குளோப் ஏவியேஷன் 4.37 சதவிகிதமும், டிரெண்ட்ஸ் 3.02 சதவிகிதமும், டாடா ஸ்டீல் 2.22 சதவிகிதமும், ஐடிசி 2.15 சதவிகிதமும் மற்றும் ஆக்சிஸ் வங்கி 2.14 சதவிகிதமும் உயர்ந்தன மறுபுறம் அதானி போர்ட்ஸ், டெக் மஹிந்திரா, எச்.சி.எல் டெக் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய பங்குகள் சரிந்தன.
முகூர்த்த வர்த்தக அமர்வைத் தவிர்த்து, இந்தியப் பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து 9வது வர்த்தக நாளாக ஏற்றத்துடன் நிறைவடைந்தன. முகூர்த்த வர்த்தக அமர்வில் மட்டும் சந்தை மிகச் சிறிய சரிவுடன் முடிவடைந்தது.
கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 86–87 அமெரிக்க டாலர் என்ற அளவில் குறைந்த நிலையிலேயே நீடித்ததால், உள்நாட்டில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இது நம்பிக்கை அளித்தது. கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதும் இந்திய ரூபாயின் மதிப்பு நிலையாக இருக்க உதவியது.
ஆசிய சந்தையில் தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு ஆகியவை உயர்வுடன் நிறைவடைந்தன. அதே நேரத்தில் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு சரிவுடன் முடிவடைந்தது.
ஐரோப்பிய சந்தை பெரும்பாலும் உயர்வுடன் வர்த்தகமான நிலையில் அமெரிக்க பங்குச் சந்தை நேற்று (செவ்வாய்க்கிழமை) சரிவுடன் நிறைவடைந்தன.
தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்றைய முன்தினம் (திங்கள்கிழமை) ரூ. 7,212.22 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 1.58 சதவிகிதம் உயர்ந்து 92.94 அமெரிக்க டாலராக உள்ளது.