இந்தியப் பங்குச் சந்தை 2வது நாளாக உயர்வு!
சென்செக்ஸ் 413.66 புள்ளிகள் உயர்ந்து 74,729.27 புள்ளிகளாகவும், நிஃப்டி 148.80 புள்ளிகள் உயர்ந்து 23,146.15 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: உலகளாவிய பங்குச் சந்தையில் நிலவிய வலுவான போக்கும், ஐடி பங்குகளில் ஏற்பட்ட கணிசமான வாங்குதல் காரணமாக, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் தொடர்ந்து 2 வது நாளாக ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 463.17 உயர்ந்து, 74,778.78 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 413.66 புள்ளிகள் உயர்ந்து 74,729.27 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 148.80 புள்ளிகள் உயர்ந்து 23,146.15 புள்ளிகளாக நிலைபெற்றது.
பங்குச் சந்தை தொடர்ந்து 2 வது அமர்வாக மீட்சியை வெளிப்படுத்தின. நேற்று (வியாழக்கிழமை) கண்ட வலுவான ஏற்றத்தைத் தொடர்ந்து, முக்கிய குறியீடுகள் இன்றும் உயர்ந்து வர்த்தகமானது.
Advertisement
Advertisement
காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு ஐடி பங்குகளில் காணப்பட்ட உற்சாகமே சந்தையின் இந்த மீட்சிக்கு முக்கிய காரணமாக அமைந்த நிலையில், பிற துறை பங்குகளும் இதற்குத் துணை நின்றன. டெக் மஹிந்திரா நிறுவனம் நிதியாண்டின் 2 வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 32.74 சதவீதம் அதிகரித்து ரூ. 1,585.6 கோடியாக உயர்ந்ததாக அறிவித்ததைத் தொடர்ந்து அதன் பங்குகள் 8.45 சதவீதம் உயர்ந்தன.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல், மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் எச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன மறுபுறும் இன்டர்குளோப் ஏவியேஷன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பங்குகள் சரிந்தன.
ஐடி பங்குகளில் தொடர்ந்து காணப்பட்ட வாங்குதல் ஆர்வம் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகள் தங்களின் மீட்சியைத் தொடர்ந்தன. வலுவான காலாண்டு முடிவுகள் மற்றும் நிறுவனங்களின் சாதகமான கருத்துகள், இந்தத் துறையின் வருவாய் குறித்த நம்பிக்கையை வெகுவாக அதிகரித்தன.
தரவுகளின் அடிப்படையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ. 5,285.37 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர்.
ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை, தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு ஆகியவை மீண்டு வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஐரோப்பியச் சந்தைகள் உயர்ந்த நிலையில் அமெரிக்கச் சந்தையும் நேற்று (வியாழக்கிழமை) ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.30 சதவீதம் சரிந்து பீப்பாய் ஒன்றுக்கு 105.6 அமெரிக்க டாலராக உள்ளது.
Benchmark indices Sensex and Nifty closed higher for the second straight day on Friday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.