FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!

சென்செக்ஸ் 544.39 புள்ளிகள் உயர்ந்து 78,639.03 புள்ளிகளாகவும், நிஃப்டி 390.70 புள்ளிகள் உயர்ந்து 24,774.30 புள்ளிகளாக நிலைபெற்றது.

3 ஆகஸ்ட் 2026, 5:41 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: பதற்றங்கள் தணிந்த நிலையில், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் சரிவுக்கு மத்தியில் வெளிநாட்டு முதலீடுகள் வருகையால், இன்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 544.39 புள்ளிகளும், நிஃப்டி 1.60 சதவீதமும் உயர்ந்தன.

தொடர்ந்து 4வது நாளாகவும் ஏற்றம் கண்ட நிலையில், இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 800.46 புள்ளிகள் உயர்ந்து 78,895.10 புள்ளிகளை எட்டியது. 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 544.39 புள்ளிகள் உயர்ந்து 78,639.03 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 390.70 புள்ளிகள் உயர்ந்து 24,774.30 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் இன்டர்குளோப் ஏவியேஷன், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், ஐடிசி மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் சன் பார்மா, பார்தி ஏர்டெல், மாருதி மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் சரிந்தன.

Advertisement

Advertisement

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று ரூ. 277.48 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

தொடர்ந்து நான்கு மாதங்களாகப் பங்குகளை விற்று வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள், ஜூலை மாதம் இந்தியப் பங்குகளை வாங்கும் நிலைக்கு சென்றனர். நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி மற்றும் உலகளாவிய பொருளாதாரச் சூழல் மேம்பாடு ஆகியவற்றால் அவர்கள் சுமார் ரூ. 20,200 கோடி அளவிற்கு இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பால், கச்சா எண்ணெய் விலை குறைந்தது. இது பணவீக்கம் மற்றும் நிறுவனங்களின் வருவாய் குறித்த கவலைகளைக் குறைத்து பங்குச் சந்தைக்கு நிம்மதியை அளித்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகையும் மற்றும் ரூபாய் மதிப்பு வலுவடைந்ததால் பங்குச் சந்தை வெகுவாக உயர்ந்தன.

ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை, தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 5.12 சதவீதம் சரிந்தது. ஜப்பானின் நிக்கி 225 குறியீடும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடும் சரிவுடன் நிறைவடைந்த நிலையில், ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

ஐரோப்பியச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமானது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று அமெரிக்கச் சந்தைகள் நேர்மறையான நிலையில் நிறைவுபெற்றது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 4.62 சதவீதம் சரிந்து பீப்பாய் ஒன்றுக்கு 83.88 டாலராக உள்ளது.

summary

Stock market benchmark indices ended higher on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments