கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!
சென்செக்ஸ் 286.98 புள்ளிகள் உயர்ந்து 77,656.09 புள்ளிகளாகவும், நிஃப்டி 115.50 புள்ளிகள் உயர்ந்து 24,334.55 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் சரிவை தொடர்ந்து, வர்த்தக இறுதியில் முதலீட்டாளர்கள் பங்குகளை கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டியதால், பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மீட்டெடுத்தன. இதன் விளைவாக, இன்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவிலிருந்து மீண்டு உயர்வுடன் நிறைவடைந்தன.
நாள் முழுவதும் சரிவுப் பாதையில் பயணித்த சென்செக்ஸ், வர்த்தக நேர இறுதியில் மீண்டு 286.98 புள்ளிகள் உயர்ந்து 77,656.09 புள்ளிகளாகவும், பிறகான வர்த்தகத்தில் அதிகபட்சமாக 77,666.39 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக 77,125.91 புள்ளிகளையும் எட்டியது. அதே வேளையில், வர்த்தக இறுதியில், நிஃப்டி 115.50 புள்ளிகள் உயர்ந்து 24,334.55 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் இன்டர்குளோப் ஏவியேஷன், அதானி போர்ட்ஸ், இன்ஃபோசிஸ், ட்ரெண்ட், டைட்டன் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் எடர்னல், ஹெச்சிஎல் டெக், பவர் கிரிட் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.
Advertisement
Advertisement
ஈரான் மீதான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கத் தடைகள் சந்தையின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால், கச்சா எண்ணெய் விலை மற்றும் பத்திரங்களின் மூலம் வரும் வருவாயும் உச்ச நிலையிலிருந்து சற்று குறைந்துள்ளன. எரிசக்திச் செலவுகளில் ஏற்பட்ட இந்தச் சாதகமான சூழல், மாதாந்திர ஒப்பந்த காலாவதி நாளான இன்று பங்குச் சந்தையை நேர்மறையான நிலையில் நிறைவடைய உதவியது.
ஆசியச் சந்தையை பொறுத்தவரை, தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு ஆகியவை உயர்வுடன் நிறைவடைந்தன. அதே வேளையில், ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடும் சரிவுடன் நிறைவடைந்தன.
ஐரோப்பியச் சந்தைகள் நேர்மறையான போக்கில் வர்த்தகமான நிலையில், நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்கச் சந்தைகள் பெரும்பாலும் சரிந்து நிறைவடைந்தன.
பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ. 1,181.66 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை 3 சதவீதம் குறைந்து பீப்பாய் ஒன்றுக்கு 89.32 டாலராக உள்ளது.
Market benchmark indices Sensex and Nifty recovered their intraday losses and ended higher on Tuesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.