FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரிலையன்ஸின் எழுச்சியும், கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியாலும் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சென்செக்ஸ், 1,233.25 புள்ளிகள் உயர்ந்து 75,692.78 புள்ளிகளாகவும், நிஃப்டி 387.70 புள்ளிகள் உயர்ந்து 23,440.80 புள்ளிகளாக நிலைபெற்றது.

2 நவம்பர் 2026, 5:22 pm
கோப்புப் படம் - ANI
பகிர்:

மும்பை: முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 2வது காலாண்டு வருவாய் அறிவிப்புக்கு பிறகு அதன் பங்குகள் ஏற்றம் கண்ட நிலையில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால், பங்குச் சந்தைக் குறியீடுகள், இன்றைய வர்த்தகத்தில் கணிசமாக உயர்ந்தன. சென்செக்ஸ் 1,233 புள்ளிகள் உயர்ந்த நிலையில் நிஃப்டி 23,440.80 புள்ளிகளை எட்டியது.

தொடர்ந்து 3வது நாளாக எழுச்சி கண்ட 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ், 1,233.25 புள்ளிகள் உயர்ந்து, இன்றைய உச்சபட்ச புள்ளியான 75,692.78 புள்ளியிலும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 387.70 புள்ளிகள் உயர்ந்து, இன்றைய உச்சபட்சமாக 23,440.80 புள்ளிகளாக நிலைபெற்றது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2வது காலாண்டு முடிவில் ரூ. 29,550 கோடி என்ற சாதனை லாபத்தைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, அதன் பங்குகள் 11.64 சதவீதம் உயர்ந்தன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 33.8 சதவீதம் அதிகமாகும். எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் தொலைத்தொடர்புப் பிரிவின் வளர்ச்சி இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

Advertisement

Advertisement

சென்செக்ஸில் டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமெண்ட், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, என்.டி.பி.சி மற்றும் மாருதி சுசுகி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் இன்ஃபோசிஸ், கோடக் மஹிந்திரா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் சன் பார்மா ஆகிய பங்குகள் சரிந்தன.

எதிர்பார்த்ததை விட சிறந்த 2வது காலாண்டு வருவாய் உள்ளிட்ட காரணத்தால், இந்திய பங்குச் சந்தை இந்த வாரத்தின் தொடக்கத்தில், வலுவான நிலையில் தொடங்கியது. அக்டோபர் மாத பயணிகள் வாகன விற்பனை வளர்ச்சி, ஆரோக்கியமான பண்டிகைக் காலத் தேவையைப் பிரதிபலித்ததுடன், மொத்த ஜிஎஸ்டி வசூல் அதிகரித்து, உள்நாட்டு நுகர்வு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் மீள்திறனை வலுப்படுத்தியதால், உள்நாட்டில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு கூடுதல் ஊக்கத்தை அளித்தது.

குறைந்த வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க-ஈரான் முயற்சி குறித்த அச்சத்தை தணிக்க இது உதவியதால், பங்குச் சந்தைக்கு இது ஆதரவாக அமைந்தது.

பண்டிகைக் கால கொள்முதல் அதிகரிப்பால், அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த ஆண்டை விட 23% உயர்ந்து ரூ.2.31 லட்சம் கோடியை கடந்தது. இது இதுவரை பதிவான இரண்டாவது அதிகபட்ச ஜிஎஸ்டி வருவாயாகும்.

வலுவான பண்டிகைக் காலத்தில் அதிகரித்த வாகனத் தேவையால், அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் பயணிகள் வாகனங்களின் விற்பனை 5 லட்சத்தை கடந்து புதிய சாதனை படைத்தது. மாருதி சுசுகி, ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனங்கள் இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர விற்பனையைப் பதிவு செய்தன.

பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று ரூ. 3,598.54 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தையில், தென் கொரியாவின் கோஸ்பி, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு ஆகியவை உயர்வுடன் முடிவடைந்தன. ஜப்பானின் நிக்கி 225 குறியிடு சரிவுடன் நிலைபெற்றது.

ஐரோப்பாவில் சந்தைகள் உயர்ந்த நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க சந்தை சரிந்தன.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 4.46 சதவீதம் சரிந்து 108.7 அமெரிக்க டாலராக உள்ளது.

summary

Stock market benchmark indices ended sharply higher on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments