கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை தொடர்ந்து 2 வது நாளாக சரிவு!!
சென்செக்ஸ் 242.65 புள்ளிகள் சரிந்து 72,529.07 புள்ளிகளாகவும், நிஃப்டி 64.05 புள்ளிகள் சரிந்து 22,716.20 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: மேற்கு ஆசியச் சூழல் குறித்த நிச்சயமற்ற சுழல், உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் உள்ளிட்டவையால் முதலீட்டாளர்கள் அச்சத்தில் முழுங்கியதால், இந்திய பங்குச் சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, தொடர்ந்து 2 வது நாளாக சரிவுடன் முடிவடைந்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 707.72 புள்ளிகள் சரிந்து 72,064 புள்ளிகளாக இருந்ததது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 242.65 புள்ளிகள் சரிந்து 72,529.07 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 64.05 புள்ளிகள் சரிந்து 22,716.20 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் டைட்டன், எச்.சி.எல் டெக், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அல்ட்ராடெக் சிமென்ட், ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் டெக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் சரிந்த நிலையில் மறுபுறம் அதானி போர்ட்ஸ், சன் பார்மா, டாடா ஸ்டீல் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்தன.
Advertisement
Advertisement
நிலையற்ற வரம்பில் உள்ள கச்சா எண்ணெய், இருபது ஆண்டு கால உச்சத்திற்கு அருகில் இருக்கும் அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய் உள்ளிட்டவை ரூபாயின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியதால், தொடர்ந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் வெளியேறி வருவதும், உள்நாட்டுப் பங்குகள் சரிவினால் ஏற்படும் பின்னடைவுகளைத் சந்தித்து வருகின்றன. இந்த அழுத்தம் மேலும் கூடும் விதமாக, முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் நடைபெறும் ஐபிஓ நிதி திரட்டலால், கூடுதல் பணப்புழக்கத்தை ஈர்த்து வருகிறது.
தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ. 5,353.22 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கெய் 225 மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன. ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு உயர்வுடன் நிலைபெற்றது.
ஐரோப்பாவில் சந்தைகள் உயர்ந்த நிலையில், அமெரிக்க பங்குச் சந்தைகள் நேற்று சரிவுடன் நிறைவடைந்தன.
உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 0.09 சதவீதம் சரிந்து 105.1 அமெரிக்க டாலராக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.