கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!
சென்செக்ஸ் 776.01 புள்ளிகள் உயர்ந்து 76,835.78 புள்ளிகளாகவும், நிஃப்டி 228.50 புள்ளிகள் உயர்ந்து 23,995.95 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: மேற்கு ஆசியாவில் பதற்றம் தணிந்ததைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக, கடந்த ஐந்து நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச் சந்தை இன்றைய வர்த்தகத்தில் ஏற்றம் கண்டன. இதில் முக்கிய குறியீடான சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்ந்து நிறைவடைந்தன.
இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் அதிகபட்சமாக 841.74 புள்ளிகள் உயர்ந்து 76,901.51 புள்ளிகளை எட்டியது. வர்த்தக முடிவில், 30 நிறுவனங்களைக் கொண்ட சென்செக்ஸ் 776.01 புள்ளிகள் உயர்ந்து 76,835.78 புள்ளிகளாகவும் 50 நிறுவனங்களைக் கொண்ட நிஃப்டி 228.50 புள்ளிகள் உயர்ந்து 23,995.95 புள்ளிகளாக நிலைபெற்றது. இதன் மூலம் கடந்த ஐந்து நாட்களாகத் தொடர்ந்த சரிவு போக்கு முடிவுக்கு வந்தது.
சென்செக்ஸில் 'எடர்னல்' அதிகபட்சமாக 5.70 சதவீதம் உயர்ந்த நிலையில், இன்டர்குளோப் ஏவியேஷன், இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா உள்ளிட்ட பங்குகளும் உயர்ந்தன. மறுபுறம் ஹச்எஃப்டிசி வங்கி, பவர் கிரிட் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகிய பங்குகள் சரிந்தன.
Advertisement
Advertisement
நிஃப்டி-யில் மற்ற துறைகளைப் பொறுத்தவரை, எஃப்எம்சிஜி 1 சதவீதமும், வங்கித் துறை 0.7 சதவீதமும், உள்கட்டமைப்பு 0.66 சதவீதமும், உலோகம் 0.6 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் 0.45 சதவீதமும், தனியார் வங்கித் துறை 0.42 சதவீதமும், பொதுத்துறை வங்கித் துறை 0.22 சதவீதமும் ஏற்றம் கண்டன.
நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 1 சதவீதமும், நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 1.3 சதவீதமும் உயர்ந்தன.
தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று ரூ. 3,892.77 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
ஆசியச் சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு ஆகியவை உயர்வுடன் நிறைவடைந்தன.
ஐரோப்பியச் சந்தைகளும், அமெரிக்கச் சந்தைகள் பெரும்பாலும் உயர்வுடன் நிறைவடைந்தன.
மேற்கு ஆசியாவில் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பது, இறக்குமதிச் செலவுகள், பங்குச் சந்தையில் ஏற்றம் மற்றும் பணவீக்கம் குறித்த கவலைகளை சற்று குறைத்துள்ளது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 9.40 சதவீதம் சரிந்து பீப்பாய் ஒன்றுக்கு 87.64 டாலராக உள்ளது.
Stock markets snapped the five-day losing streak on Monday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.