FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!

சென்செக்ஸ் 555.23 புள்ளிகள் சரிந்து 75,577.58 புள்ளிகளாகவும், நிஃப்டி 144.05 புள்ளிகள் சரிந்து 23,635.10 புள்ளிகளாக நிலைபெற்றது.

8 செப்டம்பர் 2026, 5:23 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க-ஈரான் மோதல் காரணமாக, முதலீட்டாளர்களின் நாட்டம் பங்குச் சந்தையின் மீது குறைந்து வருவதால், பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து 2 வது நாளாக சரிவுடன் நிறைவடைந்தன.

இன்றைய வர்த்தகத்தில், ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளில் ஏற்பட்ட விற்பனையும் பங்குச் சந்தையை மேலும் சரியவைத்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 579.46 புள்ளிகள் சரிந்து, 75,553.35 புள்ளிகளாக வர்த்தகமானது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 555.23 புள்ளிகள் சரிந்து 75,577.58 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 144.05 புள்ளிகள் சரிந்து 23,635.10 புள்ளிகளாக நிலைபெற்றது.

Advertisement

Advertisement

சென்செக்ஸில் ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், கோடக் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்தம் மறுபுறம் பாரத் எலக்ட்ரானிக்ஸ், அதானி போர்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் இன்டர்குளோப் ஏவியேஷன் ஆகிய பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி-யில் ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், எல்&டி, அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் சரிந்தும் மறுபுறம் பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஓஎன்ஜிசி, ஹெச்யுஎல், ஐஷர் மோட்டார்ஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி-யில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் சிறிதளவு உயர்வுடன் நிறைவடைந்தன.

உயர்ந்த வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் நிச்சயமற்ற ஸ்திரத்தன்மை ஆகியவை முதலீட்டாளர்களை அச்சத்தில் தொடர்ந்து அழ்த்தி வருவதால், இந்தியப் பங்குச் சந்தை பலவீனமான போக்கை எதிர்கொண்டு, ஏழு வாரக் குறைந்தபட்ச நிலையை எட்டியது.

துறைகளைப் பொறுத்தவரை, தனியார் வங்கி குறியீடு 1 சதவீதமும், எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடு 0.67 சதவீதமும், நிஃப்டி வங்கி குறியீடு 0.5 சதவீதமும் மற்றும் தகவல் தொழில்நுட்ப குறியீடு 0.37 சதவீதமும் சரிந்தன. அதேசமயம், ஊடக குறியீடு 1.3 சதவீதமும், மருந்து குறியீடு 0.7 சதவீதமும் மற்றும் எஃப்எம்சிஜி குறியீடு 0.35 சதவீதமும் உயர்ந்தன.

டிவிஎஸ் ஹோல்டிங்ஸ், சோலார் இண்டஸ்ட்ரீஸ், பிரமல் பார்மா, டிவிஸ் லேப்ஸ் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார உச்சத்தைத் எட்டிய நிலையில் மறுபுறம் வோல்டாஸ், யுனைடெட் ப்ரூவரீஸ், ஐசிஐசிஐ லோம்பார்ட், இண்டியாமார்ட் இன்டர்மெஷ், ஜேகே லக்ஷ்மி சிமெண்ட், ஐஆர்சிடிசி, செல்லோ வேர்ல்ட், டாபர் இந்தியா, பி&ஜி ஹைஜீன், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வாரக் குறைந்தபட்ச விலையை எட்டியது.

ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கெய் 225 மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்த நிலையில், ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு உயர்வுடன் நிலைபெற்றது.

ஐரோப்பிய சந்தை சரிவுடன் வர்த்தகமானது. தொழிலாளர் தினமான நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 280.13 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 1.45 சதவீதம் உயர்ந்து 98.36 அமெரிக்க டாலராக உள்ளது.

summary

Stock market benchmark indices Sensex and Nifty ended lower on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments