ஏற்றம் கண்ட மின்சார வாகனப் பங்குகள்!
மின்வாகன நிறுவனங்களின் பங்குகள் இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
புதுதில்லி: மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடியின் நடுவில், அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் பொருட்டு எரிபொருளைக் கவனத்துடன் பயன்படுத்துமாறும், மின்வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்குமாறும் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, மின்வாகன நிறுவனங்களின் பங்குகள் இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
மும்பை பங்குச் சந்தையில், ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் பங்குகள் 6.02 சதவீதமும், ஜே.பி.எம். ஆட்டோ பங்குகள் 4.75 சதவீதமும், ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பங்குகள் 2.47 சதவீதமும், ஒலெக்ட்ரா கிரீன்டெக் பங்குகள் 2.16 சதவீதம் அதிகரித்தன.
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலின் பாதகமான விளைவுகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க மத்திய அரசு முயன்று வருவதை வலியுறுத்திய பிரதமர் மோடி, பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக, எரிபொருளைக் கவனத்துடன் பயன்படுத்துமாறு ஞாயிற்றுக்கிழமையன்று கேட்டுக்கொண்டார்.
Advertisement
Advertisement
இதற்கிடையில், பிரெண்ட் கச்சா எண்ணெய், 3 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 104.4 அமெரிக்க டாலராக உள்ளது.
Shares of electric vehicle companies ended higher on Monday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.