பணம் இரட்டிப்புத் தருவதாகக் கூறி ரூ.2.50 கோடி மோசடி: தம்பதி கைது
திருச்சியில், பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி ரூ. 2.50 கோடி மோசடி செய்த தம்பதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சியில், பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி ரூ. 2.50 கோடி மோசடி செய்த தம்பதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பெரியமிளகுபாறை, புதுத்தெருவைச் சோ்ந்தவா் சொ. சத்தியசீலன் (50). இவருக்கு திருவானைக்கா, பெரியாா் நகரைச் சோ்ந்த ரமேஷ் (42), இவருடைய மனைவி உமா மகேஸ்வரி (36) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது, தம்பதியினா் பங்குச்சந்தையில் பணத்தை செலுத்தி, அதனை இரட்டிப்பாக்கித் தருவதாக சத்தியசீலனிடம் கூறியுள்ளனா். இதனை நம்பிய சத்தியசீலன், கடந்த ஜூலை முதல் டிசம்பா் மாதம் வரை பல்வேறு தவணையாக ரூ. 2.50 கோடியை ரமேஷ், உமா மகேஸ்வரியிடம் கொடுத்துள்ளாா். ஆனால், தம்பதியினா் குறிப்பிட்டபடி கொடுத்த பணத்தை இரட்டிப்பாக்கித் தரவில்லை. மேலும், பங்குச்சந்தையில் நஷ்டமானதால் பணத்தை திருப்பித் தரமுடியாது என தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து சத்தியசீலன் மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதனிடம் புகாா் அளித்தாா். அவரது பரிந்துரையின் பேரில், குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையா் சின்னச்சாமி, ஆய்வாளா் நாஞ்சில்குமாா், உதவி ஆய்வாளா் ஜோதிமணி ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் கணவன், மனைவி இருவரும் பணம்பெற்று மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.