முகப்பு
வணிகம்

மோசடி அழைப்புகளை அடையாளம் காட்டும் போன் பை கூகுள் பற்றித் தெரியுமா?

போன் பை கூகுள் செயலியில் உள்ள அம்சம் பற்றி...

Updated On : 6 ஜூலை 2026, 4:58 pm IST
கூகுள் - படம் - ஏபி
பகிர்:

நமக்கு வரும் மோசடி அழைப்புகளை போன் பை கூகுள் (Phone by Google) செயலி மூலம் அடையாளம் காட்டும் வசதி அறுமுகமாக உள்ளது.

ஒருபுறம் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய, மறுபுறம் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகி வருகின்றன. அதேவேளையில், செய்யறிவை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில், செய்யறிவைப் பயன்படுத்தி மற்றவர்களின் குரல்களை அதேமாதிரி உருவாக்கி அவர்கள் பேசுவது போலவே பேசி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியவர்களிடமிருந்து பணம் பறிக்கும் மோசடி செயல்கள் பெருகிக் கொண்டே வருகின்றன.

Advertisement

Advertisement

இதைத் தடுக்கும் வகையில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது கூகுள் நிறுவனம். அதன்படி, நமக்கு வரும் அழைப்பின் பின்னணியை தானாகவே சரிபார்த்து அது மோசடி அழைப்பாக இருந்தால் அந்த அழைப்பை எடுக்க வேண்டாம் என்ற எச்சரிக்கையை போன் பை கூகுள் செயலி விடுக்கும்.

ஆண்ட்ராய்டு 12 மற்றும் அதற்கு மேற்பட்ட சாதனங்களில் மட்டுமே இந்த அம்சம் செயல்பட உள்ள நிலையில், முதல்கட்டமாக இந்த மாதம் முதல் கூகுள் பிக்ஸல் செல்போன்களில் அறிமுகமாக உள்ளது.

இந்த வசதியைப் பெற அழைப்பை அழைப்பவர், பெறுபவர் என இருவரின் செல்போன்களிலும் இந்த செயலி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

A feature is available to identify scam calls using the 'Phone by Google' app.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments