முகப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் 'ஈகோ'? அதிகார வலிமையைக் காட்டும் உச்ச நீதிமன்றம்: திருமாவளவன்

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து திருமாவளவன் கூறியது பற்றி...

37 வினாடிகள் முன்பு
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் 'ஈகோ'? அதிகார வலிமையைக் காட்டும் உச்ச நீதிமன்றம்: திருமாவளவன்
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து தொல், திருமாவளவன் கூறியது பற்றி...
பகிர்:

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு உச்சநீதிமன்றத்தின் அதிகார வலிமையைக் காட்டும் ஈகோ

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல் தூணில் தீபமேற்ற அனுமதி உத்தரவிட்டிருப்பது, உச்ச நீதிமன்றத்தின் அதிகார வலிமையைக் காட்டும் ஈகோ என விசிக தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, தொல். திருமாவளவனின் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் மறு ஆய்வு மனுவை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இடைக்காலத் தீர்ப்பு வந்தவுடன் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் மறு ஆய்வு மனுவை விடுமுறை முடிந்தவுடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல், 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்கிற்கு முன்னுரிமை கொடுத்தது ஏன்?

Advertisement

Advertisement

இதில் இவ்வளவு அவசரமும் ஆத்திரமும் ஏன்? உச்சநீதிமன்றம் இதனை தனது 'ஈகோ' பிரச்னையாகக் கருதுகிறதா?

சமூக நல்லிணக்கத்தைவிடவும் உச்ச நீதிமன்றத்தின் ஈகோ தான் முதன்மையானதா?

எத்தனையோ தீர்ப்புகள் இப்படி நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றனவே?! குறிப்பாக, சபரிமலையில் பெண்கள் பங்பேற்பது பற்றி அளிக்கப்பட்ட தீர்ப்பு கிடப்பில் போடப்பட்டிருப்பதைப் பற்றி ஆத்திரப்படாத உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்னையில் தீவிரம் காட்டுவது ஏன்?

கார்த்திகை திருநாளன்று தீபம் ஏற்றுவதுதான் மரபு. அதனையும் தகர்த்தெறிந்துவிட்டு தொடர்பில்லாத ஒருநாளில் தீபம் ஏற்ற ஆணையிடுவது உச்சநீதிமன்றத்தின் அதிகார வலிமையைக் காட்டும் ஈகோ தானே?

இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு மக்களுக்கான நீதியா? அல்லது நீதிமன்றத்தின் உச்சநிலை அதிகாரத்தைக் காட்டும் ஆதிக்கப் போக்கா?

துணை இராணுவப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் திருப்பரங்குன்றம் மலையை ஒப்படைப்பது மாநில அரசின் உரிமைகளை நசுக்கும் மேலாதிக்கம் தானே? இது பேரதிர்ச்சியையும் பேரச்சத்தையும் அளிக்கிறது" என்று கூறியுள்ளார்.

summary

The order issued regarding the deepam issue at Tirupparankundram is an expression of ego that highlights the Supreme Court’s formidable power, says VCK Leader Thol. Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.