திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை! - செய்திகள் நேரலை
திருப்பரங்குன்றத்தில் தொடரும் தீப சர்ச்சை தொடர்பான செய்திகள் உடனுக்குடன் நேரலையில்...
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றாக கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்தக் கோயில் சார்பில் மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
இருப்பினும், இந்த இடம் மோட்ச தீபம் ஏற்றும் இடம் எனவும், மலை மீதுள்ள தூணிலேயே கார்த்திகை தீபத்தை ஏற்றுவது முந்தையக் கால வழக்கம் எனவும் ஒரு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் வழக்கமான நடைமுறைப்படி செவ்வாய்க்கிழமை மாலை உச்சிப் பிள்ளையார் கோயில் சஷ்டி மண்டபத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு புறக்கணிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை மீறிய ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடமிருந்து பாராட்டுகளும், பாஜக, ஹிந்து அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.