முகப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 300 பேர் மீது வழக்குப் பதிவு!

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது குறித்து...

53 வினாடிகள் முன்பு
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 300 பேர் மீது வழக்குப் பதிவு!
போராட்டத்தில் ஈடுபட்டோரை வாகனத்தில் ஏற்றும் காவல்துறை - படம் - பிடிஐ
பகிர்:

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூண் பகுதியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், திருப்பரங்குன்றம் மலை மீது வழக்கமாக மகா தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டதே தவிர, தூண் பகுதியில் தீபம் ஏற்றப்படவில்லை.

இதனைக் கண்டித்து தவெக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பிய ஹிந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் போது, தள்ளுமுள்ளும் ஏற்பட்டன.

Advertisement

Advertisement

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்து பிறகு, விடுவித்தனர்.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றக் கோரி நேற்று போராட்டம் நடத்திய பாஜக மற்றும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த 300 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுரை காவல்துறை தெரிவித்துள்ளது.

இவர்கள் மீது, அனுமதியின்றி சட்டவிரோதமாகக் கூடுவது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பது, சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்பது, அரசு ஊழியர்களைப் பணியாற்ற விடாமல் தடுப்பது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

It has been reported that the police have registered cases against 300 individuals who took part in a protest concerning the 'deepam' (lamp) issue at Tirupparankundram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.