தெளிவற்ற காட்சிகளையும் மேம்படுத்திக் காட்டும் ஸ்மார்ட் டிவி! சாம்சங் கிரிஸ்டல் 4கே!
மங்கிய அல்லது தெளிவற்ற காட்சிகளையும் மேம்படுத்திக் காட்டும் 4கே அப்ஸ்கேலிங் திறன் உடைய ஸ்மார்ட் டிவி குறித்து...

சாம்சங் நிறுவனத்தில் புதிதாக கிரிஸ்டல் 4கே என்ற ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முழுவதும் யுஎச்டி தரத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட் டிவி, விஷன் ஏஐ 2026-ஐ உள்ளடக்கியுள்ளது. இதுமட்டுமின்றி 7 ஆண்டுகளுக்கான இயங்குதள (ஓஎஸ்) அப்டேட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தில் பயனர்களைக் கவரும் வகையில் புதிய தயாரிப்புகள் அறிமுகமாகி வருகின்றன. அந்தவகையில் தற்போது கிரிஸ்டல் 4கே ஸ்மார்ட் டிவி அறிமுகமாகியுள்ளது.
Advertisement
Advertisement
4கே அல்ட்ரா எச்.டி. திறன் திரை உடையது. அலெக்ஸாவைப் போன்று வாயிஸ் அசிஸ்டென்ட் அம்சம் உள்ளது.
சாம்சங் டிவி பிளஸ் மூலம் 150 இலவச சேனல்களைக் கொண்டுள்ளது.
மங்கிய அல்லது தெளிவற்ற காட்சிகளையும் மேம்படுத்திக் காட்டும் 4கே அப்ஸ்கேலிங் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி காட்சிகளுக்கான நிறத்தின் அளவைக் கூட்டிக்கொள்ளவும், குறைத்துக்கொள்ளவும் முடியும்.
164.25 kWh மின் திறன் உடையது. அதிதிறன் வாய்ந்த 30 W ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளன. இதன் விலை ரூ. 39,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமேசான் இணைய விற்பனை தளத்தில் ரூ. 32,490-க்கு விற்பனையாகிறது.