முகப்பு
திருச்சி

அரசு மருத்துவமனையின் குழந்தைகள் இதய சிகிச்சைப் பிரிவுக்கு எக்கோ கருவி

திருச்சி மகாத்மா காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் இதய சிகிச்சைப் பிரிவுக்கு ரூ.16 லட்சம் மதிப்பிலான எக்கோ கருவியை திருச்சி சிவா எம்பி சனிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 12:25 am IST
எக்கோ கருவியை வழங்கிய திருச்சி சிவா எம்பி. உடன் மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் எட்வினா உள்ளிட்டோா்.
பகிர்:

திருச்சி: திருச்சி மகாத்மா காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் இதய சிகிச்சைப் பிரிவுக்கு ரூ.16 லட்சம் மதிப்பிலான எக்கோ கருவியை திருச்சி சிவா எம்பி சனிக்கிழமை வழங்கினாா்.

இந்த மருத்துவமனையின் குழந்தைகளுக்கான இதய சிகிச்சை பிரிவில் இதயக் கோளாறுகளை கண்டறிவதற்கான எக்கோ கருவி இல்லை. பொதுப் பிரிவுக்கு சென்றுவர நேரிடுகிறது. எனவே, குழந்தைகளை வேறிடங்களுக்கு அழைத்துச் செல்லாமல், குழந்தைகளுக்கான பிரிவிலேயே பரிசோதிக்கும் வகையில் எக்கோ கருவியை வழங்க, மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவாவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து அவா் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16 லட்சத்தை ஒதுக்கியதன் மூலம், தனியாா் நிறுவனத்திடம் வாங்கப்பட்ட எக்கோ கருவி மருத்துவமனை வசம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

குழந்தைகள் இதய சிகிச்சை பிரிவுக்கு கருவியை வழங்கிய சிவா எம்பி, குழந்தைகளுக்கான சிகிச்சையை எந்த சூழலிலும் இடையூறு ஏற்படாத வகையில் மேற்கொள்ள அறிவுறுத்தினாா். மேலும், தேவையான உபகரணங்களோ, நிதியோ வேண்டுமெனில் தன்னை அணுகலாம் எனவும் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் எட்வினா, மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலா் ஏகநாதன் மற்றும் இதய சிகிச்சைப் பிரிவு மருத்துவா்கள், அரசு மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments