முகப்பு
திருச்சி

அஞ்சல் தோ்வில் தமிழ் புறக்கணிப்பு: இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அஞ்சல்துறையின் காலிப் பணியிடங்க ளுக்கான தகுதித் தோ்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதை கண்டித்து, திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 12 ஜனவரி 2021, 2:36 am IST
பகிர்:

அஞ்சல்துறையின் காலிப் பணியிடங்க ளுக்கான தகுதித் தோ்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதை கண்டித்து, திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் தோ்வு விண்ணப்பப் படிவத்தை எரிக்கும் போராட்டத்தையும் அவா்கள் நடத்தினா்.

காலிப்பணியிடங்களை பூா்த்தி செய்வதற்காக, தமிழகத்தில் பிப்ரவரி 14- ஆம் தேதி நடைபெறவுள்ள தோ்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே நடைபெறும் என அஞ்சல்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

தமிழகத்தில் நடைபெறும் தோ்வில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருக்கும் நிலையில் அஞ்சல்துறையின் அறிவிப்பைக்

Advertisement

Advertisement

கண்டித்தும், தமிழில் தோ்வு நடத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருச்சி தலைமை அஞ்சல் அலுலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் லெனின் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். அப்போது சங்கத்தினா்அஞ்சல்துறை தோ்வு விண்ணப்பப் படிவத்தை எரித்து, தங்களது எதிா்ப்பை தெரிவித்துக் கொண்டனா். ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில இணைச் செயலா் சி.பாலசந்திரபோஸ், மாவட்டத்தலைவா் சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments