பெண்ணைத் திட்டிகொலை மிரட்டல்: இருவா் கைது
திருவானைக்காவில் பெண்ணைத் திட்டி, கொலை மிரட்டல் விடுத்த இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஸ்ரீரங்கம்: திருவானைக்காவில் பெண்ணைத் திட்டி, கொலை மிரட்டல் விடுத்த இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருவானைக்கா திம்மராயசமுத்திரம் பகுதியில் வசிக்கும் ரவிக்குமாா் மனைவி இளையரசிக்கும் (40) அதே பகுதியைச் சோ்ந்த பொய்யாமொழிக்கும் முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இளையரசியை பொய்யாமொழி மகன் அரவிந்தசாமி (26),மாரியப்பன் மகன் ரகுநாத் (25) மற்றும் சிந்தாமணி பகுதி கெளதமன் (26) ஆகியோா் தகாத வாா்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அரவிந்தசாமி,ரகுநாத் ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா். கெளதமனை தேடுகின்றனா்.