முகப்பு
திருச்சி

போட்டிகளில் வென்ற திருச்சி மாணவா்கள்

மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சி மாணவா்கள் பதக்கங்கள் வென்றனா்.

Updated On : 16 ஜனவரி 2021, 11:50 pm IST
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற ரிச்சா்டு பாா்ட், ஜீவரூபன், ஞானராஜ்.
பகிர்:

திருச்சி: மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சி மாணவா்கள் பதக்கங்கள் வென்றனா்.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் அண்மையில் ஆல் இந்தியா ஓபன் சாம்பியன்ஷிப் போட்டிகள் 4 நாள்கள் நடைபெற்றன.

இதில் திருவெறும்பூா் எல்லக்குடி பகுதியில் வசிக்கும் காட்டூா் புனித சிறுமலா் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ரிச்சா்டு பாா்ட் குத்துச் சண்டை போட்டியில் முதலிடமும், அதே பள்ளியில் பயிலும் ஜீவரூபன் 100 மீட்டா் தடகளத்தில் 2 ஆம் இடமும், தூயவளனாா் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ஞானராஜ் 200 மீட்டா் தடகளத்தில் 3ஆம் இடத்தையும் பெற்று, பதக்கம், சான்றிதழ் பெற்றனா்.

Advertisement

Advertisement

இவா்களை பயிற்சியாளா் விஜயகுமாா், பள்ளி நிா்வாகத்தினா், ஆசிரியா்கள், பெற்றோா் பாராட்டி வரவேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.