15.6.1976: இந்தியா - பாக். விமான தொடர்பு: பேச்சு ஆரம்பம்
இந்தியா - பாக். விமான தொடர்பு பேச்சுவார்த்தை ஆரம்பம்...
புது டில்லி, ஜூன். 14 - இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் உயர்தர சிவில் விமான போக்குவரத்து நிபுணர்கள் இன்று சந்திததனர்.
மே.14-ல் இரு நாட்டு வெளி விவகார காரியதரிசிகள் ஒப்புக் கொண்ட கொள்கைகளின் அடிப்படையில் இரு நாடுகளிடையே விமானப் போககுவாத்து தொடர்புகளையும், இரு நாடுகளின் வான வீதி வழியாக பறப்பதையும் மீண்டும் துவக்குவதற்கான விவரங்களை தயாரிக்கும் பொருட்டு இரு நாட்டு நிபுணர்களும் காலை 11 மணிக்கு முதல் சுற்று பேச்சு துவக்கினர்.
இந்திய சிவில், விமான போக்குவரத்து இலாகா கூட்டுக் காரியதரிசி ஏ. எஸ். பட்நகர் இந்திய நிபுணர் கோஷ்டிக்கும், பாகிஸ்தான் சிவில் விமான போக்குவரத்து இலாகா கூட்டு காரியதரிசி மொஹ்சின் கமல் பாகிஸ்தான் நிபுணர் கோஷ்டிக்கும் தலைமை தாங்குகின்றனர்.
Advertisement
Advertisement
பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான கொள்கைகள் ஏற்கனவே வெளிவிவகார காரியதரிசிகள் மட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டு விட்டதால் தங்களது பணி எளிதாகி விட்டதாக மொஹ்ஸின் கமல் தமது துவக்க உரையில் கூறினார்.
இரு நாட்டு கோஷ்டி தலைவர்களும் துவக்க உரை நிகழ்த்திய பின்னர் நிபுணர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து கொண்டனர். ஒரு குழு விமான போக்குவரத்தை கட்டுப்படுத்துவதையும், ஒழுங்குபடுத்துவதையும் பற்றி கவனிக்கும். இரண்டாவது குழு விமான சர்வீஸ்கள் பற்றியும், முன்றாவது குழு சர்வதேச சிவில். விமானப் போக்குவரத்து ஸ்தாபனத்திலிருந்து வழக்கை வாபஸ் பெறும் வழிமுறைகளைப் பற்றியும் கவனிக்கும்.
பிரச்னைகளை நிபுணர்கள் ஆக்க ரீதியில் துல்லியமாக அணுகவிருப்பதால், இரு நாடுகளும் நன்மை தரும் முடிவுக்கு வரும் என்பது நிச்சயம் என்று பட்நகர் குறிப்பிட்டார். ...
திருச்சியில் பெரிய தீ விபத்து: 400 வீடு, கடைகள் நாசம்
திருச்சி, ஜூன். 14 - இன்று பிற்பகலில் இங்கு முதலியார் சத்திரம் அருகே தீப்பிடித்ததில் 400 வீடுகள், கடைகள் நாசமாகின. இங்கு தீ எரிவது நகரின் பல பகுதிகளில் தெரிந்தது.
திருச்சி, ஸ்ரீரங்கம், பெல், தீயணைக்கும் நிலையத்தார் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இவ்வருடத்திலேயே இவ்வளவு பெரிய தீ விபத்து நேரிடவில்லை என்று கூறப்படுகிறது.
மாடி வீடுகளுக்கும் சேதம்
நகர சபை உறுப்பினர் பிச்சை முத்துவின் வீடு உட்பட, சில மாடி. வீடுகளும் சேதமடைந்துள்ளன.
இந்த விபத்தில் ஏற்பட்டுள்ள மொத்த பொருட் சேதம் ரூ.2 லட்சத்துக்கு இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
சுமார் 750 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. விபத்தின் காரணம் பற்றி புலன் விசாரணை நடக்கிறது.
திருச்சி நகர சபை தலைவர் டாக்டர் வி. கே. ரங்கநாதன் போலீஸ் சூப்பிரண்டு கே. பாஸ்கரா, ரெவின்யூ டிவிஷனல் அதிகாரி குணாளன் முதலியோர் விபத்து நடந்த இடத்தை வந்து பார்வையிட்டனர்.
நிவாரண நடவடிக்கைகள் முழு அளவில் எடுக்கப்பட்டு வருகின்றன.
India-Pakistan air links: Talks begin
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.