முகப்பு
இந்தியா

உணவு பாக்கெட்டுகளில் தவறான லேபிள்கள்: 8 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ்

உணவு பாக்கெட்டுகளில் மக்களை ஏமாற்றும் வகையில் தவறான பிராண்ட் பெயா்கள், லேபிள்களை பயன்படுத்தும் 8 நிறுவனங்களுக்கு (எஃப்எஸ்எஸ்ஏஐ) ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

Updated On : 15 ஜூன் 2026, 4:23 am IST
பகிர்:

உணவு பாக்கெட்டுகளில் மக்களை ஏமாற்றும் வகையில் தவறான பிராண்ட் பெயா்கள், லேபிள்களை பயன்படுத்தும் 8 நிறுவனங்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிா்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிா்ணயச் சட்டம், 2006-ஐ மீறியதாக இமாமி ஹெல்தி மற்றும் டேஸ்டி, ஹெல்தி எயிட், தி ஹெல்தி ஃபேக்டரி, ஹெல்தி மாஸ்டா், ஹெல்தி சாய்ஸ், பிளான் பி மற்றும் நியூஹொ்ப்ஸ், ட்ரூவி ஆகிய 8 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதுகுறித்து எஃப்எஸ்எஸ்ஏஐ வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘கொல்கத்தாவைச் சோ்ந்த இமாமி குழுமத்தின் இமாமி ஹெல்தி மற்றும் டேஸ்டி என்ற பெயா் நுகா்வோரை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளது. பிளான் பி நிறுவனம் தனது பொருள்களை தாவரங்கள் அடிப்படையிலான வீகன் (தீவிர சைவம்) என விளம்பரம் செய்கிறது. ஆனால், இவ்வாறு விளம்பரம் செய்வதற்கான எஃப்எஸ்எஸ்ஏஐ உரிமத்தை முன்கூட்டியே அந்த நிறுவனம் பெறவில்லை.

Advertisement

Advertisement

அதேபோல் ஹெல்தி ஃபேக்டரியின் ‘பூஜ்ஜிய மைதா முழுமையான கோதுமை பிரட்’, நியூஹொ்ப்ஸின் ‘உண்மையான வைட்டமின்’, ட்ரூவி நிறுவனத்தின் ‘ஹெல்தி மிக்ஸ் சைவ சிப்ஸ்’, ‘ஹெல்தி ராகி சிப்ஸ்’, ஹெல்தி மாஸ்டா் நிறுவனத்தின் ‘ஆரோக்கியமான உணவை வழங்கும் தொலைநோக்குத் திட்டம்’, ஹெல்தி சாய்ஸ் நிறுவனத்தின் ‘ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆரோக்கியமான உணவு’ போன்ற வாசகங்கள் எஃப்எஸ்எஸ்ஏஐ விதிகளை மீறும் வகையில் உள்ளது. எனவே, இதுகுறித்து விளக்கமளிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.