முகப்பு
தூத்துக்குடி

பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தொலைத் தொடர்பியல் துறை சார்பில் நான் ஒரு பொறியாளர் என்ற தலைப்பில் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.   இக்கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். முதல்வ

Updated On : 2 செப்டம்பர் 2013, 1:24 am IST
பகிர்:

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தொலைத் தொடர்பியல் துறை சார்பில் நான் ஒரு பொறியாளர் என்ற தலைப்பில் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

  இக்கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். முதல்வர் சுப்புராஜ் முன்னிலை வகித்தார். மின்னணு மற்றும் தொலைத் தொடர்பியல் துறைத் தலைவர் செண்பகவல்லி கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.  பெங்களூர் ரிவர்சிலிகா நிறுவனத்தைச் சேர்ந்த தலைமை விஞ்ஞானி இசக்கிமுத்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.  இதில், 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் சரவணசெல்வன், சண்முகப்பிரியா மற்றும் துறை சார்ந்த பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

இந்திய தொழில்நுட்ப கூட்டமைப்பு:

Advertisement

Advertisement

   கல்லூரியின் இந்திய தொழில்நுட்ப கூட்டமைப்பு மாணவர் பிரிவு சார்பில் சிறப்பு விரிவுரை சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆந்திர பிரதேசம் விஜயவாடா வி.ஆர்.சித்தார்த்தா பொறியியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவரும், புதுதில்லி தேசிய தர நிர்ணயக் குழுவின் வல்லுநருமான முனைவர் கோடீஸ்வரராவ் கலந்துகொண்டு, விழாவை தொடங்கிவைத்தார்.  கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி பேராசிரியர் தேவக்குமார் உட்பொதி முறைமை பயன்பாடுகள் என்ற தலைப்பில் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments