சூரிய வெப்பத்தில் தயாராகும் ஆம்லெட்! பிரான்ஸை வாட்டும் வெய்யில்!
வெப்பத்தின் தாக்கத்தை உணர்த்தும் வகையில் பிரான்ஸ் இளைஞர் செய்த செயல் குறித்து...
ஐரோப்பாவில் கடந்த சில நாள்களாக வெய்யில் வாட்டி வதைத்து வருகிறது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெய்யிலின் தாக்கத்தை உணர்த்தும் வகையில் சூரிய வெப்பத்தில் ஆம்லெட் சமைக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் கோடைக்கால வெப்ப அலை தீவிரமாகியுள்ளது. நாள்தோறும் வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாவதால், அதீத வெப்பம் காரணமாக நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
பிரான்ஸில் மட்டும் கடந்த வாரம் வெப்பத்தின் தாக்கத்தால் 40 பேர் உயிரிழந்தனர். பலர் நீர் நிலைகளில் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வெப்பத்தின் தாக்கத்தை உணர்த்தும் வகையில் பிரான்ஸ் இளைஞர் ஒருவர் சூரிய வெப்பத்தில் ஆம்லெட் சமைக்கும் விடியோ வெளியாகியுள்ளது. பார்ப்பதற்கு கேலியாக இருந்தாலும், பருவநிலை மோசமடைந்து வருவதன் பின்னணியை இந்த விடியோ மறைமுகமாக உணர்த்துகிறது.
இனி உணவு சமைக்க சமையல் எரிவாயு தேவைப்படாது எனக் குறிப்பிட்டு இளைஞர் அந்த விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தனது அடுக்குமாடி குடியிருப்பின் சன்னல் அருகே உணவு பாத்திரத்தை சிறிது நேரம் வைத்துவிட்ட பிறகு, அதில் முட்டையை உடைத்து ஊற்றுகிறார் அந்த இளைஞர். உடனே அந்த முட்டையின் கரு ஆம்லெட்டாக பொரிந்துவிடுகிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா வரிசையில் பிரான்ஸிலும் சூரிய வெப்பத்தின் தாக்கத்தில் உணவு சமைக்கும் விடியோ வெளியாகியுள்ளதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
’’தில்லியில் 6 மாதங்களுக்கு இப்படித்தான்’’ என அந்த விடியோவில் ஒருவர் கருத்திட்டுள்ளார்.
இந்த விடியோ பகடி செய்வது போன்று விளையாட்டுத்தனமாக இருந்தாலும், பருவநிலை மாற்றத்தால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதன் மோசமான சூழலை இது உணர்த்துகிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
French man’s video cooking omelette in a pan under the sun viral in internet worried about future
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.