கட்டபொம்மன் பிறந்த நாள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை
கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் கட்டபொம்மனின் 262-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கோவில்பட்டி கே.ஆர். விருந்தின் மாளிகையில் கட்டபொம்மனின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது, தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் மோகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.