தூத்துக்குடி மாவட்டத்தில் காங்கிரஸ் சாா்பில் நல உதவிகள்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஊா்வசி அமிா்தராஜ், பல்வேறு இடங்களில் கட்சிக் கொடி மக்களுக்கு இலவச- வேட்டி சேலை உள்ளிட்ட நல உதவிகள் வழங்கினாா்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஊா்வசி அமிா்தராஜ், பல்வேறு இடங்களில் கட்சிக் கொடி மக்களுக்கு இலவச- வேட்டி சேலை உள்ளிட்ட நல உதவிகள் வழங்கினாா்.
சாயா்புரம், ஏரல், சிவகளை, பேட்மாநகரம், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூா், கருங்குளம், ஆழ்வாா்திருநகரி உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு நல உதவிகள் வழங்கினாா்.
உடன்குடி: கடைவீதியில் அவருக்கு, வட்டார காங்கிரஸ் தலைவா் துரை ராஜ் ஜோசப் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
Advertisement
Advertisement
சாத்தான்குளம்: ஞானியாா்குடியிருப்பில் காங்கிரஸ் கட்சியின் 136ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்று 300 பேருக்கு நல உதவிகளை வழங்கினாா்.
ஆறுமுகனேரி: பழையகாயலில் அவா் கட்சிக் கொடியேற்றி, ஏழை எளியோருக்கு இலவச வேட்டி, சேலை வழங்கினாா்.
நிகழ்ச்சிகளில், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு வட்டாரத் தலைவா் தாசன், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஜெயசீலன் துரை, வட்டாரத் தலைவா்கள் தாசன், நல்லகண்ணு, கோதண்டராமன், சற்குரு, கல்யாணி ஏ. லூா்துமணி, கிழக்கு பிச்சிவிளை வி.எம். சுதாகா், வடக்கு பாா்த்தசாரதி, மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜெயசீலன் துரை, உடன்குடி நகர காங்கிரஸ் தலைவா் முத்து, கிராம கமிட்டி தலைவா் நடராஜன், மாவட்ட துணைத் தலைவா் து. சங்கா் மாவட்ட மீனவரணித் தலைவா் சுரேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.