முகப்பு
தமிழ்நாடு

ஸ்டாலின் பெயர் இடம்பெற்ற நெம்மேலி கல்வெட்டு அகற்றம் ஏன்? தமிழக அரசு விளக்கம்!

நெம்மேலி கல்வெட்டு விவகாரத்தில் தமிழக அரசு அதிகாரிகளின் விளக்கம் பற்றி...

Updated On : 6 ஜூலை 2026, 11:02 am IST
நெம்மேலி கல்வெட்டு - X | DMK
பகிர்:

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றப்பட்டதற்கு திமுக கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று பார்வையிடவுள்ள நிலையில், அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெயர் இடம்பெற்றிருந்த கல்வெட்டு அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக வெளியிட்ட அறிக்கையில்,

Advertisement

Advertisement

“சென்னையின் குடிநீர்த் தேவையைத் தீர்ப்பதற்காக 2006ஆம் ஆண்டில் தி.மு.க அரசு நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்போது, உள்ளாட்சித் துறை முதலமைச்சராக இருந்த கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து நிறைவேற்றினார்.

2021ஆம் ஆண்டு அவரே முதலமைச்சரான நிலையில், பெருகி வரும் சென்னையின் மக்கள் தொகையையும், விரிந்து வரும் சென்னை மாநகராட்சியின் பரப்பளவையும் கருத்தில் கொண்டு 24-02.2024 அன்று நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகுக்கான அடிக்கல்லை நாட்டி, தற்போது பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் நிலையில், இதனைப் பார்வையிட முதல்வர் விஜய் வருகிறார் என்கிற அற்ப காரணத்திற்காக, இரண்டாம் அலகு திட்டத்தின் கல்வெட்டை அகற்றியிருக்கிறது த.வெ.க அரசு.

ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் உருவாக்க வக்கில்லாத விஜய் அரசு, திராவிட மாடல் அரசின் முதல்வர் தொடங்கிய திட்டத்தின் அடிக்கல்லை அகற்றுவது அதன் பயபீதியையே காட்டுகிறது. முடிவடையும் நிலையில் உள்ள திராவிட மாடல் அரசின் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக, கல்வெட்டை அகற்றியிருக்கிறது திறமையற்ற விஜய் அரசே?” என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நெம்மேலி கல்வெட்டு தொடர்பாக அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்திருப்பதாவது:

“நெடுஞ்சாலை ஓரமாக கல்வெட்டு வைக்கப்பட்டதால், வாகனங்களின் அதிர்வு காரணமாக சேதமடைந்துள்ளது. அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக கல்வெட்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டு, கடந்த 10 நாள்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கல்வெட்டில் உள்ள எழுத்துகளுக்கு எவ்வித பாதிப்புமின்றி, வருகின்ற 20 ஆம் தேதிக்குள் கூடுதல் ஸ்க்ரூக்களுடன் கல்வெட்டு மீண்டும் பொருத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.

summary

Why was the Nemmeli plaque bearing Stalin's name removed? Tamil Nadu government explains!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments