முகப்பு
தமிழ்நாடு

வைகோவிடம் முதல்வர் விஜய் 100% அப்படி சொல்லவில்லை! நிர்மல்குமார் விளக்கம்

எம்எல்ஏக்களை ராஜிநாமா செய்யச் சொல்லி வைகோவிடம் முதல்வர் கூறினாரா? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்.

Updated On : 1 ஜூலை 2026, 3:58 pm IST
அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் - கோப்புப்படம்.
பகிர்:

எம்எல்ஏக்களை ராஜிநாமா செய்யச் சொல்லி வைகோவிடம் முதல்வர் கூறினாரா? என்பது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.

மதிமுக செயற்குழு கூட்டம் முடிந்து செய்தியாளர்களுடன் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ,

"மதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால், இடைத்தேர்தலில் நானே வந்து அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறேன் என விஜய் சொன்னார். எம்எல்ஏவை அவர் ராஜிநாமா செய்யச் சொல்வதில் எந்த தவறும் இல்லை" என்று கூறினார். பின்னர், தான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்றும் தெரிவித்தார். திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும், தவெகவுக்கு ஆதரவாக செயல்படப் போவதாகவும் வைகோ அறிவித்தார்.

Advertisement

Advertisement

இந்நிலையில் வைகோ பேசியது பற்றி அமைச்சர் நிர்மல் குமார் பதிலளிக்கையில்,

"எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்யுங்கள் என்று நாங்கள் யாரையும் சொல்லவில்லை. திமுகவுடன் பயணிக்க முடியாது என்ற நிலையில் இருப்பதை வைகோ அனைவரிடமும், எங்களிடமும் தெரிவித்தார். அதன்பிறகு அது எம்எல்ஏக்களின் முடிவு. நாங்கள் எந்த ஆதாயத்திற்காகவும் யாரையும் ராஜிநாமா செய்யுங்கள் என்று சொல்லவில்லை. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.

'ராஜிநாமா செய்தால் அவர்களை தவெக சார்பில் போட்டியிட்டு ஜெயிக்க வைக்கிறேன்' என்று எங்களுடைய முதல்வர் 100% ஒருபோதும் சொல்லவில்லை. அங்கு நடந்தது என்னவென்று வைகோவிடம் கேளுங்கள், அவர் விளக்கம் கொடுப்பார்" என்று தெரிவித்தார்.

summary

Chief Minister Vijay did not say that to Vaiko: NirmalKumar clarifies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments