தவறான நபருக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை: வெங்கட நாராயணா விவகாரத்தில் அமைச்சர் பதில்
தவறான நபருக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை என்று வெங்கட நாராயணா நியமன விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் பதிலளித்துள்ளார்.
தவறான நபருக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை என்று வெங்கட நாராயணா நியமன விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் பதிலளித்துள்ளார்.
ஜனநாயகன் பட தயாரிப்பாளரை தில்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு எழும் எதிர்ப்புகள் குறித்த கேள்விக்கு, தில்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள வெங்கட நாராயணா கர்நாடகத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவர் ஆந்திரத்தைச் சேர்ந்தவர். அந்த பொறுப்பில் இருந்து அவர் எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க மாட்டார். விஜய்க்கு பல அழுத்தங்கள் வந்தபோது உடனிருந்தவர். தவறான நபருக்கு அப்பொறுப்பு வழங்கப்படவில்லை.
அவர் தில்லியிருந்து ஒருங்கிணைப்பு வேலை மட்டுமே செய்ய உள்ளார். இதுவரை அலங்காரமாக இருந்த பதவி, இன்று நம்பிக்கையுள்ள ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அரசு அமைவதற்கு உழைத்தவர்கள் முதல்வரின் ஆலோசகர்களாக இருப்பதில் என்ன தவறு? அனைத்து பொறுப்புகளிலும் பொருத்தமானவர்கள் தான் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
Advertisement
Advertisement
இஸ்லாமியராக மதம் மாறுபவர்களுக்கு இட ஒதுக்கீட்டு உரிமை வழங்கும் அரசாணையை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவு குறித்த கேள்விக்கு,
அந்த நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும். அவசரமாக இந்த வழக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஒருசில நாட்களில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், மாநகராட்சி பணிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை தனியாருக்கு தான் கொடுக்க முடியும். முந்தைய அரசின் போது ஒப்பந்தம் கொடுக்கப்பட்ட பழைய நிறுவனம் செய்த தவறுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம்.
பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதி விபரத்தையும் சேர்ப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் சொல்லவில்லை. செங்கோட்டையன் சொன்னது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சாதி சான்றிதழை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தான்குறிப்பிட்டார்.
செங்கோட்டையன் சொன்னது போல, அப்படி எந்த திட்டம், யோசனை அரசுக்கு இல்லை. செங்கோட்டையன் அவசரத்தில் தவறுதலாக சொல்லி விட்டார் எனக் கூறினார். தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம் செய்யப்பட்டதற்கு திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Minister Nirmal Kumar has responded in the Venkata Narayana appointment issue, stating that the responsibility has not been given to the wrong person.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.