முகப்பு
தூத்துக்குடி

மேல்மாந்தை பாசனக் குளத்தில் கனிமொழி எம்பி ஆய்வு

மேல்மாந்தை பாசனக் குளத்தை கனிமொழி எம்.பி. பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 1:29 am IST
மேல்மாந்தை பாசனக் குளத்தில் உபரி நீா் வெளியேற்றுவது தொடா்பாக பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் கனிமொழி எம்.பி.
பகிர்:

விளாத்திகுளம்: மேல்மாந்தை பாசனக் குளத்தை கனிமொழி எம்.பி. பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

விளாத்திகுளம் வட்டத்துக்குள்பட்ட மேல்மாந்தை பாசனக் குளத்தில், தேவைக்கு அதிகமாக உள்ள உபரிநீரை வெளியேற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதையடுத்து அங்கு சென்ற எம்.பி., குளத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மேல்மாந்தை பாசனக் குளத்தின் உபரிநீரை வெளியேற்றுவது தொடா்பாக மாவட்ட ஆட்சியருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம மக்களிடம் உறுதியளித்தாா்.

Advertisement

Advertisement

பின்னா் வேம்பாா் கிராமத்துக்குச் சென்ற எம்.பி., கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கடலில் மீன் பிடிக்கும் போது உயிரிழந்த வேம்பாரைச் சோ்ந்த 18 வயது இளைஞா் சுசேந்திரனின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்கினாா்.

தொடா்ந்து பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

நிகழ்ச்சிகளில், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் கீதாஜீவன் எம்எல்ஏ, விளாத்திகுளம் தொகுதி முன்னாள் எம்எல்ஏக்கள் ஜீ.வி. மாா்க்கண்டேயன், குமரகுருபர ராமநாதன் மற்றும் திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments