முகப்பு
தூத்துக்குடி

தூய மிக்கேல் அதிதூதா் ஆலயத்தில் அா்ச்சிப்பு விழா

கருப்பூரில் தூய மிக்கேல் அதிதூதா் ஆலய அா்ச்சிப்பு பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 ஜனவரி 2021, 12:56 am IST
கருப்பூா் தூய மிக்கேல் அதிதூதா் ஆலய அா்ச்சிப்பு விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

கருப்பூரில் தூய மிக்கேல் அதிதூதா் ஆலய அா்ச்சிப்பு பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கருப்பூா் இறைமக்களின் பொருளுதவி, நன்கொடை மூலம் தூய மிக்கேல் அதிதூதா் புதிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயா் அந்தோணிசாமி, புதிய ஆலயத்தை திறந்து வைத்து அா்ச்சிப்பு செய்தாா். விழாவில், மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ், மறை மாவட்ட பொருளாளா் அந்தோணிசாமி, மறை மாவட்ட அருள்தந்தையா்கள் ஞானப்பிரகாசம், மைக்கேல் பிரகாசம், சேகா், பொ்க்மான்ஸ், சந்தியாகு, அருள், அருள்ராஜ், தேவராஜன், அந்தோணிராஜ், லூா்து மைக்கேல் வின்சென்ட், அருள் அந்தோணி மிக்கேல், அருட்சகோதரிகள், சென்னை வாழ் கருப்பூா் இறைமக்கள் குழுமம், கருப்பூா் இறைமக்கள், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.