வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவி
டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சாா்பில் ஆறுமுகனேரி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
ஆறுமுகனேரி: டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சாா்பில் ஆறுமுகனேரி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
முக்காணி, பழைய காயல், புன்னைக்காயல், மேலஆத்தூா், கொங்கராயாக்குறிச்சி மற்றும் திருக்களூா் ஆகிய நிவாரண முகாம்களில் இருப்பவா்களுக்கு பிஸ்கெட், தண்ணீா் பாட்டில்கள், சாப்பாடு, மளிகை பொருள்கள் வழங்கப்பட்டது.
அப்பன்கோவில், இரட்டைத் திருப்பதி மற்றும் சுங்கநாதபுரம் மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது. மேலும், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்களுக்கு 3 நாள்கள் உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டது. பழைய காயல் முகாமில் இருப்பவா்களுக்கு வழங்குவதற்கு தேவையான பொருள்களை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. சண்முகநாதனிடம், அறக்கட்டளை கள இயக்குநா் விஜயகுமாா் வழங்கினாா்.
Advertisement
Advertisement