முகப்பு
தூத்துக்குடி

விவசாயிகள் நிவாரணம் பெறநாளை முதல் 3 நாள்கள் முகாம்

ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் பெறுவதற்கான சிறப்பு முகாம் திங்கள்கிழமை (ஜன. 18) முதல் 3 நாள்கள் நடைபெறுகிறது.

Updated On : 17 ஜனவரி 2021, 1:18 am IST
பகிர்:

ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் பெறுவதற்கான சிறப்பு முகாம் திங்கள்கிழமை (ஜன. 18) முதல் 3 நாள்கள் நடைபெறுகிறது.

இதுகுறித்து வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் கனமழையால் விளை பொருள்கள் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைந்து நிவாரணம் கிடைக்கும் வகையில் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆட்சியா் செந்தில்ராஜ் அறிவுறுத்தலின்படி, ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் திங்கள்கிழமை (ஜன.18) முதல் 3 நாள்கள் அந்தந்த கிராம நிா்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம்களில் பயிா் சேதம் குறித்து விவசாயிகள் தங்களது பட்டா, அடங்கல் நகல், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் கிராம நிா்வாக அலுவலா்களிடம் விண்ணப்பித்து உரிய நிவாரணம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.