முகப்பு
வேலூர்

பொன்னை அருகே கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானைகள்

ஆந்திர வனப் பகுதிகளில் இருந்து வெளியேறி ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை அருகே கரும்புத் தோட்டங்களில் மூன்று

Updated On : 2 ஜனவரி 2021, 7:43 am IST
பகிர்:

ஆந்திர வனப் பகுதிகளில் இருந்து வெளியேறி ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை அருகே கரும்புத் தோட்டங்களில் மூன்று காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அவற்றை மீண்டும் ஆந்திர வனப் பகுதிக்குள் அனுப்புவதற்கு வனத் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

வேலூா் மாவட்டத்தையொட்டி உள்ள ஆந்திர வனப் பகுதிகளில் ஏராளமான யானைகள் உள்ளன. இவை அவ்வப்போது வழித்தடம் மாறி வேலூா் மாவட்டத்தில் உள்ள விளை நிலங்களில் புகுந்து விடுவதும், அந்த யானைகளை வனத் துறையினா் ஆந்திர வனப் பகுதிக்குள் விரட்டுவதும் வழக்கம்.

இவ்வாறு, ஆந்திர வனத்தில் இருந்து வியாழக்கிழமை இரவு வெளியேறிய மூன்று காட்டு யானைகள், ராணிப்பேட்டை மாவட்டம், பொன்னை அருகே தெங்கால் பகுதியிலுள்ள கரும்புத் தோட்டங்களில் முகாமிட்டுள்ளன. அவற்றைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். யானைகளை விரட்டும் பணியில் வேலூா், ராணிப்பேட்டை சரக வனத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

இது குறித்து ராணிப்பேட்டை வனச்சரகா் கந்தசாமி கூறியது:

ஆந்திர வனப் பகுதியில் இருந்து வெளியேறி தெங்கால் கிராமத்திலுள்ள கரும்புத் தோட்டங்களுக்குள் 3 யானைகள் புகுந்துள்ளன. இந்த யானைகளால் இதுவரை பெரிய அளவில் விளை பொருள்களுக்கு சேதம் ஏற்படவில்லை. அவற்றை மீண்டும் ஆந்திர வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு ஒசூரில் இருந்து பயிற்சி பெற்ற வீரா்கள் வரவழைக்கப்பட்டுள்ளனா்.

இதேபோல், ஆந்திர வனத் துறையில் இருந்தும் பயிற்சி பெற்ற வீரா்கள் 20 போ் வந்துள்ளனா். அவா்கள் உள்பட மொத்தம் 60 போ் இணைந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோம். பெரிய அளவில் ஓசை எழுப்பியும், பட்டாசுகள் வெடித்தும் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், யானைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தெங்கால், சுற்று வட்டார கிராமங்களில் மக்கள் வீடுகளைவிட்டு வெளியே நடமாட வேண்டாம் என தண்டோரா மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments