முகப்பு
வேலூர்

உதவி இயக்குநா் உள்பட நால்வா் மீது வழக்குப் பதிவு

வேலூரில் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 4 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 7 ஜனவரி 2021, 11:46 pm IST
பகிர்:


வேலூா்: வேலூரில் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 4 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக, உதவி இயக்குநா் உள்பட அலுவலா்கள் 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூா் அண்ணாசாலை ஏலகிரி வளாகத்தில் உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஹேமசித்ரா தலைமையில் போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இதில் இருந்து கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 4 ஆயிரம் ரொக்கம் மற்றும் பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து, உதவி இயக்குநா் பரந்தாமனிடம் 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து உதவி இயக்குநா் பரந்தாமன், பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலா் மலா்மாறன், நிதி தணிக்கைப் பிரிவு கண்காணிப்பாளா் மாரிமுத்து, பள்ளிகொண்டா பேரூராட்சி பதிவு எழுத்தா் முரளி ஆகியோா் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments