முகப்பு
தமிழ்நாடு

வைகோவின் நோபல் பரிசு பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் பதில்

நோபல் பரிசு கிடைத்தால் வைகோவுக்கு நன்றி சொல்வேன் என திருமாவளவன் பேசியது குறித்து...

Updated On : 8 ஜூலை 2026, 6:47 pm IST
திருமாவளவன் / வைகோ - எக்ஸ்
பகிர்:

நோபல் பரிசு கிடைத்தால் வைகோவுக்கு நன்றி சொல்வேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று (ஜூலை 8) தெரிவித்தார்.

திருமாவளவனின் பேச்சுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்திருந்தார். அமைச்சரவையில் இடம்பெற்ற பிறகும் தவெகவுக்கு ஆதரவு திமுகவுடன் நட்பு என திருமாவளவன் பேசியிருந்ததைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு பேசினார்.

இந்நிலையில், அரியலூரில் இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், ''வைகோவின் பரிந்துரைக்கு நன்றி; நோபல் பரிசு கிடைத்தால் வைகோவுக்கு நன்றி சொல்வேன்'' எனக் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

மேலும் அவர் பேசியதாவது:

''இந்தியா கூட்டணியில் தவெக, திமுக இடம்பெற வேண்டும். என் கருத்தை புரிந்துகொள்ள முடியாதவர்கள் விமர்சிக்கின்றனர்.

பாஜகவுக்கு எதிராக ஒரு அணியை திரட்ட வேண்டும். அந்த அணியில் எதிரும் புதிருமாக இருக்கும் திமுகவும் இடம்பெற வேண்டும்; தவெகவும் இடம்பெற வேண்டும்.

இதனை நான் கூறினால் என்னிடம் பிரச்னை என்கின்றனர். அது அவர்களின் பார்வை. நான் தேசிய கண்ணோட்டத்தில் இதனைக் கூறுகிறேன்'' எனக் குறிப்பிட்டார்.

summary

Thanks to Vaiko for the Nobel Prize nomination: Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments