பாகிஸ்தான் சரக்கு விமானம் நடுவானில் மாயம்: தேடும் பணி தீவிரம்!
பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்திற்கு வந்த சரக்கு விமானம் நடுவானில் மாயமானது.
பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்திற்கு வந்த சரக்கு விமானம் நடுவானில் மாயமானது.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து பாகிஸ்தானின் கராச்சிக்குச் சென்ற சரக்கு விமானம் ஒன்று நேற்று (ஜூலை 7) இரவு கராச்சி துறைமுகப் பகுதிக்கு அருகே திடீரென கீழீறங்கி, கட்டுப்பாட்டு அலுவலகத்துடன் தொடர்பை இழந்து மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அரபிக் கடல் பகுதியில் விமானத்தைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. விமானத்தில் பைலட் உள்பட ஊழியர்கள் 5 பேரின் நிலை என்னவென தெரியவில்லை.
Advertisement
Advertisement
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா விமான நிலையத்திலிருந்து கராச்சிக்கு சரக்கு ஏற்றிச் சென்ற 'போயிங் 737' வகை விமான, கராச்சியைச் சேர்ந்த 'கே2 ஏர்வேஸ்' என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது. பாகிஸ்தான் நேரப்படி இரவு 9:18 மணிக்கு விமானத்தில் கோளாறு ஏற்பட்டு கராச்சிக்கு 287 கி.மீ தொலைவில் அதனுடனான இணைப்புத் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரவு 9:21 மணியளவில் விமானம் வேகமாக கீழே இறங்கிய நிலையில், அதன் திசையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது ரேடாரில் பதிவானதாகத் தரவுகள் குறிப்பிடுகின்றன.
விமானத்தைத் தேடும் பணியில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அரசு சார்பில் விமானங்கள், கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான் கடற்படையின் 'பிஎன்எஸ் ஜுல்பிகார்' போர்க்கப்பல் விமானம் மாயமானதாகக் கூறப்படும் பகுதிக்கு உடனடியாக அனுப்பப்பட்டது. தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் விமானத் துறை தெரிவித்துள்ளது.
மே 2020-ல் கராச்சியில், 98 பேருடன் சென்ற பாகிஸ்தான் பயணிகள் விமானம் கராச்சி விமான நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும் போது ஏற்பட்ட இயந்திரக் கோளாறே இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. விபத்தில் ஒரு பயணியைத் தவிர அனைவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
A cargo plane bound for Karachi Airport in Pakistan went missing in mid-air.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.