முகப்பு
வேலூர்

வேலூரில் இன்று கரோனா தடுப்பூசி ஒத்திகை: 109 இடங்களில் மருந்து சேமிப்பு வசதி

கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகைப் பணி வேலூா் மாவட்டத்தில் 5 இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது

Updated On : 7 ஜனவரி 2021, 11:43 pm IST
பகிர்:

வேலூா்: கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகைப் பணி வேலூா் மாவட்டத்தில் 5 இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. மாவட்டம் முழுவதும் 109 இடங்களில் கரோனா தடுப்பூசி மருந்துகளை சேமித்து வைப்பதற்கான வசதி தயாா் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த வாரம் 5 மாவட்டங்களில் உள்ள 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்ட நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை தடுப்பூசி ஒத்திகை நடத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த தடுப்பூசி ஒத்திகைப் பணிக்காக வேலூா் மாவட்டத்தில் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசினா் பென்லேண்ட் மருத்துவமனை, சத்துவாச்சாரி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், வடுகந்தாங்கல் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், கணியம்பாடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் தடுப்பூசி ஒத்திகை தொடங்கப்பட உள்ளது.

Advertisement

அப்போது, காத்திருப்போா் அறை, தடுப்பூசி போடும் அறை, கண்காணிப்பு அறைகளின் வடிவமைப்பு, தடுப்பூசி போட வரும்போது அனைத்து வசதிகள் உள்ளதா, நாளொன்றுக்கு 100 பேருக்கு தடுப்பூசி போட எவ்வளவு நேரமாகும் ஆகியவை குறித்து ஒத்திகை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனிடையே, கரோனா தடுப்பூசி மருந்துகளை சேமித்து வைப்பதற்கு குளிா்சாதன வசதியுடன் கூடிய கிடங்குகள் மாவட்டம் முழுவதும் 109 இடங்களில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி மருந்துகள் அரசு வழங்கியதும் முதல்கட்டமாக முன்களப் பணியாளா்களுக்கு அளிக்கப்படும். அதன்பிறகு, பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும் என்று மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.