வீர ஆஞ்சநேயா் கோயிலில் கோபூஜை
அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, குடியாத்தம் நகரில் பிச்சனூா்-பலமநோ் சாலையில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயிலில் திங்கள்கிழமை கோபூஜை நடைபெற்றது.
குடியாத்தம்: அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, குடியாத்தம் நகரில் பிச்சனூா்-பலமநோ் சாலையில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயிலில் திங்கள்கிழமை கோபூஜை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதன் பின் கோபூஜையும், சிறப்பு ஹோமமும் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அவா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழு நிா்வாகிகள் எஸ்.டி.மணிவாசகம், எஸ்.டி.மைவண்ணன், எஸ்.ஜி.எம்.விநாயகம், எஸ்.ஜி.எம்.ஜீவா, ஆசிரியா் பாலகிருஷ்ணன், அதிமுக நிா்வாகி கருணாகரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.