முகப்பு
செய்திகள்

லேடீஸ் அண்ட் லேடீஸ்... டாக்ஸிக் நாயகிகள் அறிமுக விடியோ!

டாக்ஸிக் திரைப்படத்தின் புதிய விடியோ...

Updated On : 1 ஜூலை 2026, 12:17 pm IST
நடிகைகள் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த்
பகிர்:

நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் திரைப்படத்திற்கான நாயகிகளின் அறிமுக விடியோவை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் யஷ் நடித்த டாக்ஸிக் திரைப்படம் எப்போதும் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். டீசர் அளித்த பிரம்மாண்டம் வியப்பில் ஆழ்த்தியதால் எப்படி உருவாகியிருக்கும் என்பதில் பெரிய ஆர்வமும் சமூக வலைதளங்களில் உள்ளது. கீது மோகன்தாஸ் இயக்கிய இப்படத்தில் ருக்மணி வசந்த், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு ஜூன் 4 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், லேடீஸ் அண்ட் லேடீஸ் எனப் பெயரிட்ட நாயகிகளின் அறிமுக விடியோவை வெளியிட்டுள்ளனர். இதில், நடிகைகள் நயன் தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கான காட்சிகள் ஆவலை அதிகரிக்கச் செய்துள்ளது.

The introduction video for the female leads of actor Yash's film Toxic has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments