டாக்ஸிக்-ல் விட்டதை ராமாயணாவில் பிடித்த யஷ்!
ராமாயணா வசூல் குறித்து...
ராமாயணா திரைப்படத்திற்கான நடிகர் யஷ் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
நிதிஷ் திவாரி இயக்கத்தில் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்த ராமாயணா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் பாகத்தில் ராவணனான நடிகர் யஷ் சீதையான சாய் பல்லவியைக் கடத்திக்கொண்டு போவதுடன் நிறைவடைந்துள்ளது.
நல்ல விமர்சனங்களால் இப்படம் உலக அளவில் ரூ. 650 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
அதே நேரம், ராவணனாக நடித்த நடிகர் யஷ்ஷுக்கு பாராட்டுகளும் கிடைத்து வருகின்றன. டாக்ஸிக் திரைப்படத்தால் கடும் எதிர்வினைகளைச் சந்தித்த யஷ், மீண்டும் ராமாயணா மூலம் தனக்கான பாராட்டுகளைப் பெற்றுள்ளது அவரது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வணிக ரீதியாகவும் யஷ்ஷின் மாஸ்டர் மைண்ட் நிறுவனம் இணை தயாரிப்பாளராக ராமாயணாவைத் தயாரித்திருப்பதால் பல கோடிகள் லாபமாக கிடைக்க உள்ளது.