நல்ல விமர்சனங்களைப் பெறும் ராமாயணா!
ராமாயணா திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன...
நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் உருவான ராமாயணா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பிர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவாகியுள்ள ராமாயணா இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
ராமாயணத்தைத் தழுவி பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் அதிக பொருள்செலவில் உலகின் முன்னணி விஎஃப்எக்ஸ் நிறுவனமான டினெக் பங்களிப்பில் ஆச்சரியப்படும் வகையில் எடுக்கப்பட்ட இந்த ராமாயணா திரைப்படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், விஎஃப்எக்ஸ் காட்சிகள் அசத்தலாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
முக்கியமாக, தமிழில் ஏஐ உதவியுடன் உதடு அசைவுகளுக்கு ஏற்ப டப்பிங் கச்சிதமாக இருப்பதால் தமிழிலேயே எடுக்கப்பட்டது போல் இருந்ததாக விமர்சனங்களில் குறிப்பிடுகின்றனர். முக்கியமாக, 3டி வடிவம் பிரம்மாண்டத்தைக் கண்முன் காட்டுவது சிறப்பான அனுபவமாக இருந்ததையும் கூறியுள்ளனர்.
அமெரிக்காவில் இப்படத்தின் முன்னோட்ட சிறப்புக் காட்சி திரையிடப்பட்ட போது கலவையான விமர்சனங்களே கிடைத்தன. ஆனால், ஆச்சரியமாக திரையரங்க வெளியீட்டில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இப்படம் ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.