முதல் நாள் வசூலில் வரலாற்றுச் சாதனை படைத்த ராமாயணா..! அதிகாரபூர்வ அறிவிப்பு!
நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ராமாயணா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து...
நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள ’ராமாயணா: முதல் பாகம்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 155 கோடி என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
நமீத் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டூடியோஸ் உடன் டிஎன்இஜி மற்றும் யஷ்ஹின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து இந்தப் படம் தயாராகியுள்ளது.
நிதீஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
Advertisement
Advertisement
ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர், சீதையாக சாய் பல்லவி, ராவணன் கதாபாத்திரத்தில் யஷ், மண்டோதரியாக காஜல் அகர்வால், சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்துக்கான விமர்சனங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில், முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 155 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
தீபாவளிக்கு முன்னதாக வெளியான இந்திய படங்களில் அதிக வசூலித்த படமாக ராமாயணா வரலாற்றுச் சாதனை படைத்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்தாண்டு வெளியாக இருக்கிறது. ஏற்கெனவே இந்தப் படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்தது கவனிக்கத்தக்கது.