முகப்பு

நாகர்ஜுனாவின் கிங் - 100 வெளியீட்டு போஸ்டர்!

நாகர்ஜுனா நடித்த கிங் - 100 திரைப்பட போஸ்டர்....

40 வினாடிகள் முன்பு
நாகர்ஜுனாவின் கிங் - 100 வெளியீட்டு போஸ்டர்!
பகிர்:

நடிகர் நாகர்ஜுனா நடித்த அவரது 100-வது திரைப்படத்திற்கான வெளியீடு போஸ்டர் வெளியாகியுள்ளது.

அன்னபூர்னா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் நாகர்ஜுனாவின் 100-வது திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை, நித்தம் ஒரு வானம், மேட் இன் கொரியா ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் இரா. கார்த்தி இயக்கி வருகிறார்.

அரசியல் கலந்த ஆக்‌ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டு வரும் இப்படத்திற்கு கிங் 100 பெயரிட்டுள்ளனர். இதில், நடிகர் அசோக் செல்வன் நடிகைகள் தபு, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Advertisement

Advertisement

இப்படத்தில் நடிகர் அசோக் செல்வன் கர்ணா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அண்மையில் போஸ்டர் வெளியிட்டனர்.

இந்த நிலையில், இந்தப் படம் வெளியாக இன்னும் 30 நாள்கள் உள்ளன என்கிற நினைவூட்டல் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இது, வருகிற டிச.24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அன்று நடிகர் ஷாருக்கானின் கிங் திரைப்படமும் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

The release poster for actor Nagarjuna’s 100th film has been unveiled.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.