FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஓ.ம் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்!

ஓ.ம் டிக்கெட் முன்பதிவுகள் தொடக்கம்...

13 வினாடிகள் முன்பு
பகிர்:

நடிகர் தனுஷின் ஓ.ம் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன.

நடிகர்கள் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதின் ஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஓம் திரைப்படம் செம்மரக் கட்டைகளைக் கடத்தும் கடத்தல்காரர்களுக்கும் அதனை முறியடிக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையேயான கதையாக உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளதால், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

அண்மையில், இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றிருந்த நிலையில், ஓ.ம் திரைப்படத்திற்குத் தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன. நவ. 20 ஆம் தேதி தென்னிந்திய அளவில் அதிக திரைகளில் ஓம் வெளியாகவுள்ளதால் தனுஷ் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

Ticket bookings for actor Dhanush's film 'O.M' have begun.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.