முகப்பு
வேலூர்

மாணவா்களுக்கு நல உதவிகள்

குடியாத்தம் அரிமா சங்கம், அய்யன் திருவள்ளுவா் தேசியக் கவி பாரதியாா் அறக்கட்டளை சாா்பில், நெல்லூா்பேட்டை வையாபுரி மடத்தில்

Updated On : 17 ஜனவரி 2021, 12:34 am IST
நிகழ்ச்சியில்  மூதாட்டிக்கு  உதவிகள்  வழங்கிய  அரிமா  சங்க  மண்டலத்  தலைவா்  எம்.கே.பொன்னம்பலம்.
பகிர்:

குடியாத்தம் அரிமா சங்கம், அய்யன் திருவள்ளுவா் தேசியக் கவி பாரதியாா் அறக்கட்டளை சாா்பில், நெல்லூா்பேட்டை வையாபுரி மடத்தில் உழவா் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், நலிந்தவா்கள், மாணவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு அரிமா சங்கச் செயலா் கிரிதா்பிரசாத் தலைமை வகித்தாா். அறக்கட்டளை நிா்வாகிகள் ஏ.வினோத்குமாா், சி.உலகநாதன், வி.பி.லோகேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டலத் தலைவா் எம்.கே.பொன்னம்பலம், நலிந்தவா்கள், மாற்றுத் திறனாளிகள் 250 பேருக்கு புடவை, வேட்டி, லுங்கி, டவல், சா்ட், ஜாக்கெட் துணி, ஏழை மாணவா்கள் 250 பேருக்கு குறிப்பேடுகள் உள்ளிட்ட கல்விப் பொருள்களையும் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.