முகப்பு
விழுப்புரம்

மே தின சிறப்பு கிராம சபைக் கூட்டம்

மே தினத்தையொட்டி, சின்னசேலம் ஒன்றியம் காரனூரில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் ஊராட்சித் தலைவர் ச.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

Updated On : 2 மே 2013, 12:32 pm IST
பகிர்:

மே தினத்தையொட்டி, சின்னசேலம் ஒன்றியம் காரனூரில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் ஊராட்சித் தலைவர் ச.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. வட்டாட்சியர் வே.ஜவகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பி.சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கோட்டாட்சியர் சி.ராஜசேகரன் பங்கேற்றார்.

சீரான குடிநீர் விநியோகம், பசுமை வீடுகள் மற்றும் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்வது, சுகாதார பாரத இயக்கம் (நிர்மல் பாரத் அபியான்) திட்டத்தின் மூலம் ஊரகப் பகுதிகளில் நடைபெற்றுவரும் வீடுவாரியான சுகாதார நிலை குறித்த கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பது, திறந்த வெளியில் மலம் கழித்தலை தடுத்து தூய்மையான ஊராட்சியாக மாற்றுவது, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பயன்கள் முழுமையாக சென்றடைவதை உறுதி செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.